உயிர்த்து தவித்து

Posted by G J Thamilselvi On Tuesday, 4 September 2012 10 comments

அன்று நான் உயிர்த்ததும்,
இன்று நான் அணு அணுவை மரணிப்பதும்,
உன்னால் தான்.

நீ இல்லா நிமிடங்கள் கானல் என்றேன்,
லட்சியம் செய்யாமல் அலட்சியம் செய்தாய்.

உன்னை காணா விழிகள் கலங்கி நின்றேன்,
குழந்தையா?. நீ என புருவம் சுருக்கினாய்.

உன் அருகாமைக்காய் தவித்து நின்றேன்,
காரணங்கள் சொல்லி தள்ளி வைத்தாய்.

உன் அணைப்பில் உருகி நின்றேன்.
தவறு என்று சொல்லி குற்ற உணர்வில் மனம் குமுற வைத்தாய்.

நெஞ்சடைக்கும் உயிரின் வேதனை நீ உணர்ந்ததில்லை போலும்,
என் வலிகள் உனக்கு விளங்கவில்லை.

உலகத்தில் உன் நேசம் ஒன்றிற்காக மட்டுமே,
நான் சுவாசித்தேன்.

உன்னை காண்பதற்காகவே உயிர் வாழ்கிறேன்.

சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை,
உண்பதும் உறங்குவதும் தவிர கண்ட பலன் எதுவும் இல்லை.

நீ இல்லா உலகம் நரகமே எனக்கு,
உன் விழிகள் என்னை தீண்டிசெல்வதும்,
என் விழிகள் உன்னை தழுவிகொல்வதும்
பிடிக்கவில்லையா உனக்கு?.

ஆயிரம் உறவுகள் உனக்கு இருக்கலாம்,
உயிராய் நேசிக்க படை இருக்கலாம்,
என் காதல் அதில் காணமல் போகலாம்,

காலம் நம்மை பிரிக்கலாம்,
கவின் மிகு அழகு மறைந்து போகலாம்.

முதுமை வந்து முத்தமிடலாம்,
மரணம் வந்து கொண்டுபோகலாம் ,

அன்றும் என் விழிகள் உனக்காகவே பார்த்திருக்கும்,
இதயம் உன் நினைவை சுமந்தே துடிப்பை நிறுத்தும்.  

10 comments:

 1. அன்றும் என் விழிகள் உனக்காகவே பார்த்திருக்கும்,
  இதயம் உன் நினைவை சுமந்தே துடிப்பை நிறுத்தும்.//

  காதலின் துடிப்பைச் சொல்லிப்போகும்
  கவிதை மிக மிக அருமை
  குறிப்பாக இறுதிவரி
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நல்லா இருக்குங்க...

  அருமையாக முடித்துள்ளீர்கள்...

  ReplyDelete
 3. சிறப்பானது!

  வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்!!

  ReplyDelete
  Replies
  1. ம் ம் தங்களின் பாராட்டினால் மனம் சுகிப்பானது

   Delete
 4. அழகாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டு அழகிற்கு அணி சேர்க்கிறது

   Delete