யாரோ என் உயிரை தீண்டியது?

Posted by G J Thamilselvi On Thursday, 6 September 2012 10 comments
யாரோ என் உயிரை தீண்டியது?
தன் விழியாலே,
யாரோ என் முகத்தை தேடியது?


யாரோ புது வருகை தந்தது?
என் இதயத்திலே,
யாரோ தினம் கனவில் கொன்றது?

சுகமான சுகம்தான் அவள்,
முகத்தை பார்த்த மறு நொடியும்.
ஒரு விதமான வலிதான்,
அந்த நினைவில் அகற்ற,
தின துளியும்.

காதல் என்று காதில் சொல்லி,
கனவை நெஞ்சி்ல் மறு முறை கிள்ளி,
இதயத்தகட்டில் மலர்களை தூவி,
ஏன் தான் சென்றாயோ?

விழியோடு அவள் விழிகள் மோத,
முகிலோடு முகிலும் மோத,
இடியாக இசைத்தது இங்கே,
ஆண் மகன் இவன் இதயம்.

தினந்தோறும் இதயத்தை கீறி,
மருந்தாக அவள் பார்வையால் நீவி,
சிரிப்பாக மயில் இறகையும் வீசி,
துடிப்பாக இவன் காயம் ஆற்றும்,
மருந்தும் ஆவாளோ?

யாரோ என் முகத்தை தேடியது?
தன் விழியாலே,
யாரோ என் உயிருடன் ஓய்ந்தது?

யாரோ நெஞ்சில் வருகை தந்தது?
மன தோட்டத்திலே,
யாரோ நெஞ்சில் கனவை தந்தது?

இதமான சுகம் தான் அவன்,
நெஞ்சில் தோன்றிய துளிதுளியும்.
மனதோடு பேசும்,
அவன் விழிகள் மொழியின் முகவரியும்.

கனவாக அவன் உயிரில் நின்றான்,
நினைவாக இன்று என்னுடன் நடந்தான்,
விழி நோக்கும் அந்த கணங்களில் கலந்தான்,
காதல் அவனானான்.

யாரோ என்னை தீண்டியது?
அன்பின் வரவாலே,
யாரோ என் உயிரைச் சேர்ந்தது?

10 comments:

  1. அன்புடையீர்.வணக்கம் தங்களது பதிவுகளை எனது இ.மெயிலுக்குத் தர இயலுமா?
    நன்றி
    கொச்சி தேவதாஸ்
    snrmani@rediffmail.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா, தங்களுக்கு என் பதிவை மெயிலில் அனுப்ப முயற்சி செய்கிறேன்.

      Delete
  2. அங்கங்கே கேள்வியும் பதிலுமாக... அருமையான காதல் கவிதை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி, தங்களின் பாராட்டும் விமர்சிப்பும் என்னை ஊக்கப்படுத்துகிறது

      Delete
  3. அருமை ..! இப்படி எழுத்தில் ஒருமுறை கொண்டுவர எத்தனை முறை எனக்குள் "அருமை" என்று சொல்லிவந்தேன் என்ற எண்ணிக்கைத் தெரியவில்லை...!!

    ReplyDelete
    Replies
    1. அதிகமாக ஊக்கப்டுத்துகிறீர்கள் என்று எண்ணுகிறேன்...மிகவும் நன்றி சில நேரங்களில் ஊக்கப்படுத்துபவர்களும் அத்தியாவசிய தேவையாகிவிடுகிறார்கள்

      Delete
  4. நல்லதொரு காதல் கவிதை! சிறப்பான படைப்பு!

    இன்று என் தளத்தில்
    வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிச்சயம் தங்கள் தளத்திற்கு வருகை தருகிறேன்

      Delete