என்றென்றும்

Posted by G J Thamilselvi On Wednesday, 5 September 2012 9 comments

மெத்தென்று கரங்களுக்குள்
மலராக பூத்த சுகம்
நெஞ்சத்து நினைவுகளில்
உறவாக லயித்த சுகம்
விழியோடு விழியாக

பார்வைகள் தந்த சுகம்
மொழி பேசி லயித்ததிலே
உணர்வுகள் மௌன சுகம்
காற்றோடு உன் வாசம்
மணமாக வந்த சுகம்
சுவாசத்தில் கலந்துவிட்ட
உன் மூச்சு உயிரின் சுகம்
காலடி சுவடுகளில்
பாதம்பட்ட நெஞ்சின் சுகம்
பாரதிருப்பதிலும் காதலின்
விழிப்பே சுகம்
பேசாதிருப்பதிலும்
மனகாட்சி தரும்
களிப்பே சுகம்
மொத்தத்தில் நீ தரும்
முத்தத்தில் சுகம் தானடா
 என்றென்றும்.

9 comments:

 1. பாரதிருப்பதிலும் காதலின்
  விழிப்பே சுகம்
  பேசாதிருப்பதிலும்
  மனகாட்சி தரும்
  களிப்பே சுகம்
  /////////////////////

  அழகான வரிகள்

  ReplyDelete
 2. நல்ல கவிதை...

  ReplyDelete