கண்களில் ஏன் ஈரமோ?

Posted by G J Thamilselvi On Wednesday, 5 September 2012 8 comments

ண்களில் ஏன் ஈரமோ
நண்பியே தவிப்பது ஏன்?
வாழ்க்கை இங்கு கானல் தூரமே
தள்ளியே நடப்பது ஏன்?
ஒரு முறை காதல் கசந்ததென்றால்

மறுபடி அது இங்கு உயிர்க்காதா?
எண்ணங்களை மோதவிட்டு
துவர்ப்பது உணர்வா சொல்
ஏன் அழுகிறோம்
ஏன் தவிக்கிறோம்
அறியாமை என்பதாலே
ன் சுகிக்கிறோம்
ஏன் திளைக்கிறோம்
நடுநிலை இன்மையாலே
காதல் எனும் உணர்வு அது
காத்திருக்கும் செயலா சொல்
தேகம் தீண்டி தீ வைத்து
எரித்துவிடும் நிகழ்வா சொல்
அன்பிலே நம்பிக்கை உண்டு
நம்பிக்கை காதலடி
காதலென்று சொல்லுவதென்றால்
பிரிவுகள் இல்லையடி
புரியாத புதிரெல்லாம்
புரிந்து கொள்ள துணிந்திடடி
புதிர்போல கவலைக்கொள்ளும்
செயல்கள் மட்டும் தள்ளுபடி
இது காதல் அகராதி
அங்கு விளக்கங்கள் இல்லையடி
சரியோ தவறென்றோ
தீர்ப்புகள் இல்லையடி
எல்லாமே சரிதான் சொல்வேன்
எல்லாமும் தவறே என்பேன்
சட்டங்கள் இல்லையென்றால்
குற்றங்கள் ஏதுமில்லை
அன்பிற்குள் திளைக்கும் போது
சட்டங்கள் தேவையில்லை
கண்களில் ஏன் ஈரமோ
நண்பியே தவிப்பது ஏன்
வாழ்க்கை இங்கு வாழ்ந்து
பார்க்கனும் தள்ளியே
நடப்பதும் ஏன்?

8 comments:

 1. நல்ல வரிகள்...

  மிகவும் பிடித்தவை :

  /// வாழ்க்கை இங்கு வாழ்ந்து
  பார்க்கனும் தள்ளியே
  நடப்பதும் ஏன் ? ///

  ReplyDelete
  Replies
  1. தங்களிடம் விருந்து வாங்கிய உணர்வுஇ நன்றி

   Delete
 2. சரியான கேள்வி!

  ReplyDelete
 3. சிறப்பான வரிகள்! அருமையான படைப்பு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி தங்கள் தளத்திற்கு வருகிறேன்

   Delete