ஆசைதான் எனக்கு

Posted by G J Thamilselvi On Tuesday, 4 September 2012 7 comments

 மார்கழி குளிர் இதமாய் உன் நெஞ்சத்தில்,
மஞ்சமிட ஆசை தான் எனக்கு.
உன் முரட்டு கரங்களுக்குள்,  
இடைவெளியே இல்லாமல்,

இணைந்து கிடக்க ஆசை தான் எனக்கு.
நீ உறங்குகிறாய் என்று எண்ணி  
முகமெங்கும் முத்தமிட்டு,
உன் விழிப்பில் வெட்கப்பட 
 ஆசை தான் எனக்கு.
நீள்கிற ஆசைகளை 
 பட்டியலிட தோன்றினாலும்,
உன் வார்த்தை அம்புகளுக்கு 
பயந்து  எனக்குள் மருகி போகிறேன்.
காதலோடு நேசிக்கும் பெண்மையை
சம்பிரதாயகூட்டிற்குள் முடக்கிவிடுவாதால்
வாழ்வும் கசந்து தான் போகிறது.

7 comments:

 1. காதலோடு நேசிக்கும் பெண்மையை
  சம்பிரதாயகூட்டிற்குள் முடக்கிவிடுவாதால்
  வாழ்வும் கசந்து தான் போகிறது.//

  அருமையான வரிகள்
  "இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா "
  என "ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக
  ஆசைவைத்தார் " என்கிறபாடலில் கண்ணதாசன் அவர்கள்
  எழுதிய வரிகளுக்கு ஈடான அருமையான கவிதை
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அழகான கவிதை தலைப்புக்கு சரியாக பொருந்தும் வரிகள்... 2

  ReplyDelete
 3. நல்ல வரிகள்... அருமை... (தலைப்பும்)

  ReplyDelete
 4. //உன் வார்த்தை அம்புகளுக்கு
  பயந்து எனக்குள் மருகி போகிறேன்
  //
  நச்!

  ReplyDelete
 5. //உன் வார்த்தை அம்புகளுக்கு
  பயந்து எனக்குள் மருகி போகிறேன்.
  காதலோடு நேசிக்கும் பெண்மையை
  சம்பிரதாயகூட்டிற்குள் முடக்கிவிடுவாதால்
  வாழ்வும் கசந்து தான் போகிறது.

  இருமுறை படித்து மிகவும் ரசித்தேன்..

  ReplyDelete