அன்புகுவியல்

Posted by G J Thamilselvi On Tuesday, 4 September 2012 11 comments
 சி்ன்ன அன்பு குவியல்
அது சிந்தும் மொழியில்
எந்தன் ஜீவன் இங்கு
சிந்து பாடிட ரசித்தேன்
தத்தி வந்த தங்க ரதம்
கட்டியது எந்தன் மனம்
சிந்திய சின்னஞ்சிரிப்பில்

கன்ன கதப்பில்
அவன் எழில் முகத்தில்
கண் சிமிட்டும் காதல் கலை
கிரகித்தேன்
குறுஞ்சிரிப்பு கண்ணாலே
எனை இழுத்துக் கொண்டானே
இதழ் சுழித்து விழித்ததிலே
மனக் கொதிப்பை தகர்த்தானே
மென் மெத்தை பூ குவியல்
அவன் பெண் இவளை கவர்ந்தானே
புரியாத புதிர்கள் எல்லாம்
புரிந்ததி்ங்கு அன்பாலே
புதிர் போடும் இசைதான்
அவனை என்றுமே
மனம் தேடும்.

11 comments:

 1. Really good one...Please write more poems.
  Ezhini@gmail.com

  ReplyDelete
 2. அழகான வரிகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. குழந்தை என்றாலே குதூகலம்தான்! அருமை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்
  பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
  http://thalirssb.blogspot.in/2012/09/7.html

  ReplyDelete
 4. புரியாத புதிர்கள் எல்லாம்
  புரிந்ததி்ங்கு அன்பாலே//

  அருமையான வரிகள்
  அருமையான கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அரைப்புள்ளி, புள்ளி மற்றும் ஆச்சர்யக்குறி போன்றவற்றைப் பயன்படுத்தினால் கவிதை இன்னமும் அழகுபெறும் .

  நன்று!

  ReplyDelete
 6. தங்களது கவிதைகள் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்.
  snrmani@rediffmail.com

  ReplyDelete