யார் அவனோ நீ

Posted by G J Thamilselvi On Saturday, 22 September 2012 5 comments
பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்க கண்டேன்
அதன் வண்ண அழகில் நெஞ்சம் மயங்கி
ரசிக்கச் சென்றேன்.
எத்தனை ரசனை உனக்கு
அழகியலில் மன்னனோ...?

உன் விரல் தோய்தெடுத்த
மையின் இரகசிய மொழி என்னவோ...?
காற்றடிக்கும் திசையறியேன்
காற்றின் மணம் முகர்ந்தறிந்தேன்
தத்திசென்ற  பாதங்களில்
புல்லின் உடல் உணர்வறிந்தேன்
வண்ணஞ்சிறு  பூக்களிலே
ஓவியனாய் உனையறிந்தேன்
நீரை அள்ளி பருகையிலே
விஞ்ஞான மூளை உணர்ந்தேன்
காற்றின் சீழ்கையிலே இசைவாணன்
நிஜமறிந்தேன்
பறவைகள் சிறகடிக்க
கலைவாணன் என்று வியந்தேன்
வானம் பூமி அத்தனையும்
உன் படைப்பின் மகிமை அற்புதமே
தேடி வந்தேன் உன்னிடமே
உனை சேர்த்திடவே இக்கணமே
உன் சிரிப்பில் கவர்ந்தாய்
பொற்பதமே...
நீ .....நீ....நீ
விகடன் என்பது ஊர்ஜிதமே.

5 comments:

 1. காற்றடிக்கும் திசையறியேன்
  காற்றின் மணம் முகர்ந்தறிந்தேன்
  தத்திசென்ற பாதங்களில்
  புல்லின் உடல் உணர்வறிந்தேன்

  அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அழகிய வரிகள்... ரசிக்க வைத்தது...

  ReplyDelete
 3. ரசிக்க வைத்த வரிகள்

  ReplyDelete