மனித உயிர்களின் மகத்துவம் மறைந்து போன மனிதாபமற்ற நாட்டில் வாழ்வதற்காக வேதனைபடுகிறேன். இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டம்  கீழ்நாச்சிப்பட்டு புதிய பைபாஸ் சாலையில் லாரி அடித்து இறந்துவிட்ட இளைஞரை தமிழக ஆளுநர் ரோசய்யாவின் மாண்பு மிகு வருகையால் சாலையின் ஓரத்திலேயே போட்டு வைத்திருந்த போலீசார்களின் மனிதாபிமானமற்ற செயலை என்னவென்பது. மனிதனுக்கு இருக்கும் மரியாதை கரன்சி நோட்டிற்கு இருக்கும் மரியாதையை விட கேவலாமானதாகவே இருக்கிறது. உயிர்களின் மதிப்பு குறைந்து போனதின் காரணம் என்ன?  ஆளும் வர்கத்தினர் ஆளப்படுபவர்களுக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமே தவிர இப்படி உதாசீனப்படுத்தும் ஊன்றுகோலாய் இருக்க வேண்டியதில்லை.

2 comments:

 1. மிகவும் வேதனையான விசயம்! நம் நாட்டில்தான் இப்படி நடக்கும்!

  இன்று என் தளத்தில்
  தளிர்ஹைக்கூ கவிதைகள்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

  ReplyDelete
 2. ஒருவர் இறந்துபோனது குறித்து எனது ஆழ்ந்த இரங்கல்.

  எனினும் இச்செய்தியில் காண்பிக்கப்பட்டுள்ள அளவு இரக்கமற்ற செயல்களில் நமது காவலர்கள் ஈடுபடுவார்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை..சொல்லப்படாத அல்லது அறிந்திராத எதோ ஒன்று இருக்கக்கூடும்.

  விபத்து நடந்தவுடனே மரணம் ஏற்பட்டிருந்தால் ..மேற்கொண்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளின் பொருட்டு உடலை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்..அஃகுதன்றி அப்படியே பொட்டுச்செல்லும் செயல்களை காவலர்கள் செய்வதில்லை என நான் நம்புகின்றேன்...

  உயிருக்குப்போராடும் ஒருவரை காப்பதில் அனவருக்குமே மனிதாபிமானம் உண்டு தமிழர்களிடம் இது அதிகமாகவே காணப்படுகின்றது..இதில் காவலரும் அடங்குவர்.

  இன்னமும் தொடர்வண்டி விபத்தில் மரணம் ஏற்படும்போது உடலை அப்புறப்படுத்த.. ஒரு சில சமயம்... நாள் கணக்கில் ஆகும்(இதை எண்ணிப்பார்த்தாவது ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள் தவிக்கலாம்!)

  ReplyDelete