இந்த பதிவிற்கு முன்னதாக ஒரு வார இடைவெளி, சோர்ந்து  போன என்னை உற்சாகப்படுத்திக்கொள்ளவே இந்த மலர்கள்.


“இந்த டிராப்ட்ட மாத்தி அடிங்க, இந்த கவர்ன்மென்ட் ஆர்டர் ஏன் இப்படி டைப்பண்ணியிருக்கீங்க,”
“ இப்படி தாங்க சார் டைப்பண்ணனும்,” 
“எனக்கு தெரியாதா. ரூல்ஸ்லம் ஒண்ணும் வேணாம், இந்த இடத்துல கொஞ்சம் ஸ்பேஸ் குறைச்சுட்டு, இனிஷியல் பண்றதுக்கு மட்டும் இடம் விட்டு கொண்டு வாங்க” 

சரி ஏதோ சொல்றாங்களேன்னு பொய் மாற்றிக்கொண்டு வந்தா, ஏன் பாமினியில டைப் பண்ணியிருக்கீங்க, வெனிலா பாண்ட் ல தான் டைப் பண்ணனுமாம்...வெனிலா வேண்டாமாம்..யுனிகோட் மாத்துங்க, யுனிகோடும் வேண்டாமாம், பெரியார்...பெரியார் பாண்ட் டெல்லில பயன்படுத்துறதில்லையாம் ஓல்ட் டைப்ரைட்டர் பாண்ட்ல டைப் பண்ணுங்க... 

அட போங்க சார் ஒரு டிராப்ட் அடிக்க ஒரு நாளை கடத்திட்டு கடைசில  பாமினியில டைப்பண்ணதே ஓகே...பிரிண்ட் போட்டு கொண்டுவாங்க...என்று முடித்தால் எப்படி இருக்கும்...நொந்து தான் போனேன்... மதிய சாப்பாட்டிற்கு கூட அனுப்பாத புண்ணியவான்கள் வாழும் நாடு.

இந்த இயந்திர கதியிலிருந்து சற்றே விலகிவிட ஆசைதான்...நோ வேலை...நோ பதிவு... நோ...டெலிபோன்...நோ...தொல்லைக்காட்சி பெட்டி...ரொம்ப அதிகமா யோசிச்சு...யார்கிட்டயாவது கதைக்கலாம்னு பார்த்தா...எங்கேயும் சோகம்ன்னு ஒரே கோரஸ் தான்.

இது சரிபாடாதுன்னு சொல்லி போய்ட்டேன் நம்ம ப்ரண்ட்டுங்ககிட்ட

0 comments:

Post a Comment