நிகழ்ந்துவிட கூடாது

Posted by G J Thamilselvi On Tuesday, 11 September 2012 9 comments
சற்றேர குறைய,
அது நிகழ்ந்துவிட கூடாதுதான்,
அது தான் என் எதிர்பார்ப்பும் கூட,
நீ என்னை சந்திக்காமல் இருந்திருக்கலாம்,
பேசாதேவாது இருந்திருக்கலாம்,

என்றேனும் கூட அது நிகழக்கூடாதுதான்,
நீ என்னை சந்திக்க வரும் போதோ,
அல்லது நான் உன்னிடம் பேசும் போதோ,
ஒரு வேளை இருவரும்,
சந்திக்காமலே கூட போகலாம் தான்,
என்ன செய்ய அது நிகழவேண்டும் என்று,
நெகிழ்ந்துருகிவிட்ட பிறகு,
காதல் இல்லை என்று நீ,
அழித்து சத்தியம் செய்யலாம்,
புறகாரணிகளாலோ, 
அல்லவோவென்றால்,
முன்பே வந்து விட்ட ஒரு யுவனின்,
அதீத ஈர்ப்பு தந்த சுகிப்பினாலோ!
சமூகத்தின் கட்டமைப்புகளில்,
நான் பிரசவித்த காதல்,
கல்லறை பூக்களுக்கு தாரை,
வார்க்கப்படலாம்...,
இருந்தும்  உனக்கு தெரியவரும்,
வார்த்தைகளில் உணர்வுகள்,
முழுமைப்பெறுவதில்லை என்று.

9 comments:


 1. வார்த்தைகளில் உணர்வுகள்,
  முழுமைப்பெறுவதில்லை என்று.//

  நிச்சயமாக
  ஆனால் தங்கள் கவிதையில் சொல்லவேண்டியது
  மிகச் சரியாகச் சொல்லப்பட்டு
  முழுமைபெற்றிருக்கிறது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உணர்வுமிகு வரிகள்... முடிவு வரிகள் அருமை...

  ReplyDelete
 3. வார்த்தைகளில் உணர்வுகள்,
  முழுமைப்பெறுவதில்லை என்று.
  அழகான வரிகள். தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. காதல் எப்பவுமே கல்லறைக்கு போகுறது இல்லீங்க...காதலர்களுக்கு வேண்டுமானல் அது நிகழலாம்

  ReplyDelete