தவிக்கிறேன் துடிக்கிறேன்

Posted by G J Thamilselvi On Monday, 10 September 2012 8 comments
தவிக்கிறேன் துடிக்கிறேன்,
இயலாமையாலே!
சூழ்நிலைகள் எனை தாக்க,
துவள்கிறேன் முடியாமையாலே!
வாழ்க்கை எனும் நிகழ்வோடு,
ஒன்றாமல் தடுமாறும்,
நெஞ்சாலே!
தோற்று போகாமல்,
தினம் தோற்கிறேன்.
அன்பை எதிர்பார்த்து,
தினம் சாகிறேன்.
என் தனிமை கொல்ல,
புது வழியை சொல்ல,
ஒரு துணை இன்றி,
தொலைந்தேன் பெண்ணே!
காட்சி எல்லாமும் தடுமாறுதே,
கானல் பின்னே,
மனம் இடமாறுதே,
புது விதியை கொள்ள,
என் பாதை வெல்ல,
என் தனிமை கொல்ல,
வருவாய் பெண்ணே!
நெஞ்சம் என்னாலும்,
உனக்காகதான்.
தஞ்சம் அடைந்தேன்,
உன்னோடு நான்.
அந்த நினைவே சுகம்,
அதன் நிகழ்வே கணம்,
எந்தன் வலி எல்லாம்,
தீரும் பெண்ணே!
காற்று திசை மாறி,
இடம் மாறுதே,
மழையும் பொழியாமல்,
மனம் மாறுதே,
மண்ணின் பண்பிங்கு
விடமானதே,
பெண்மை குணம் இங்கு,
மணம் மாறுதே,
உன்னை எங்கே நான்,
காண்பேன் பெண்ணே!
விழியோடு கொஞ்சம்,
காதல் வேண்டும்,
மொழியோடு அன்பின்,
சாயல் வேண்டும்,
செயலோடு உன்னில்,
தாய்மை வேண்டும்,
துயர் தீர்க்க,
வருவாய் பெண்ணே!

8 comments:

 1. விழியோடு கொஞ்சம்,
  காதல் வேண்டும்,
  மொழியோடு அன்பின்,
  சாயல் வேண்டும்,
  செயலோடு உன்னில்,
  தாய்மை வேண்டும்,
  துயர் தீர்க்க,
  வருவாய் பெண்ண//

  மனம் கவர்ந்த அருமையான வரிகள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நல்ல தவிப்புத்தான்....!

  ReplyDelete
 3. ஏங்க வைக்கும் வரிகள்...

  அருமையாக முடித்துள்ளீர்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. துயர் சீக்கிரம் நீங்கட்டும்! நல்ல கவிதை!

  இன்று என் தளத்தில்!
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
  http://thalirssb.blogspot.in/2012/09/8.html


  ReplyDelete
 5. உன்னை எங்கே நான்,
  காண்பேன் பெண்ணே!
  விழியோடு கொஞ்சம்,
  காதல் வேண்டும்,
  மொழியோடு அன்பின்,
  சாயல் வேண்டும்,
  செயலோடு உன்னில்,
  தாய்மை வேண்டும்,
  துயர் தீர்க்க,
  வருவாய் பெண்ணே!
  அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete