காதல் தேவதையே...!

Posted by G J Thamilselvi On Thursday, 20 September 2012 4 comments

கண்ட நாள் முதல்,
உனை கண்ட நாள் முதல்,
உள்ள பூவிற்குள்,
காதல் வண்டின் ரீங்காரம் கேட்டேன்.
செல்ல குறும்புகள்,
உன் கண்கள் பார்வையில்,
அதை கண்ட போதெல்லாம்,
இதயம்  கிள்ளிச் செல்ல பார்த்தேன்.
ஒரு முறை தீண்டிச் சென்றாயே...!
உயிரினை கொய்ய கண்டாயே...!
விழிகளால் எனை வருடியே...!
மீண்டும் உயிர்தந்து மீட்டாயே...!
பின்னோடு வந்த நாளெல்லாம்,
ஜென்மங்கள் நீள கண்டேன்.
ஒய்யார சிணுங்கல் கோபங்கள்,
நெஞ்சோடு காதல் வளர கொண்டேன்.
பூ முகம் பூத்ததில் என் மனம் காய்த்தது,
தேகத்தை கடந்துமே உணர்வுகள் பிணைந்தது,
உருவங்கள் அழிந்துமே நம் உயிரங்கே இணைந்தது,
பேசாத நாட்கள் கூட சுகம் தானே இங்கு,
பகிராத நினைவும் கூட துறப்போமே அன்று,
காணாத நாட்களிலும் காதல் அரும்புதடி...!
அரும்பான நேசத்திலே நம்பிக்கை துளிர்க்குதடி...!
காதலுடன் மோக முள் மலராக தவிக்குதடி...!
உன் கன்னங்கள் வலிக்குமென்று,
என் உதடுகள் உறங்குதடி...!

4 comments:

 1. :) நல்லதொரு காதல் கவிதை ...

  ReplyDelete
 2. காணாத நாட்களிலும் காதல் அரும்புதடி...
  ////////////

  உண்மையான வரிகள் + அழகு
  அழகான கவிதை

  ReplyDelete
 3. ஒரு முறை தீண்டிச் சென்றாயே...!
  உயிரினை கொய்ய கண்டாயே...!
  விழிகளால் எனை வருடியே...!
  மீண்டும் உயிர்தந்து மீட்டாயே...!

  அருமையான வார்த்தைகள். அழகான கவிதை.

  ReplyDelete