ஹார்ட் பீட் தொண்டு நிறுவனம்

Posted by G J Thamilselvi On Thursday, 9 August 2012 1 comments
    ஹார்ட்பீட் தொண்டு நிறுவனம் தமிழ்ச்செல்வி ஆகிய என் எண்ணத்தில் கருத்தரித்து என் உடன் பிறவா சகோதரியும் நண்பியுமான நிர்மலா மற்றும் என் தாயார் திருமதி.ஜாய் செல்வ குமாரி கோவிந்தராசன் ஆகிய மூவரின் கூட்டு முயற்சியால் உருவானது. நானும் நிர்மலாவும் மாற்று திறனாளிகள், வேலூர் மாவட்டம் காட்பாடியில் சேவை புரிந்து வரும் ஒர்த் அறக்கட்டளையினால் ஊன்று கோலின் உதவியோடு நடக்க கற்றோம். அந்நிறுவனம் கொடுத்த கல்வியின் பயனால் மன தைரியத்தை பெற்றோம். நாங்கள் பெற்ற உதவிகளுக்கு நன்றி என்றொரு முற்று வைக்க மனதில்லை எங்களுக்கு. எங்கள் தாயின் கர்ப்ப்தில் எத்தனை பாதுகாப்பை உணர்ந்திருப்போமோ...அத்தனை அன்பின் அரவணைப்போடு எங்கள் மீது அக்கறை செலுத்தியது அந்நிறுவனம்.


     பெற்ற உதவிகளை பெற்றவர்களுக்கே திரும்பவும் செய்து கடன் கழிக்க எத்தனிக்கும் செயலை இயற்க்கை அனுமதிப்பதில்லை. நாங்கள் பெற்றதை தேவையில் இருக்கும் பலருக்கு தர எண்ணினோம். உடல் ஊனத்தை எண்ணி குன்றி போனவர்களின் மனதை தட்டி எழுப்ப எண்ணினோம். எங்களை ஈன்றெடுத்த அந்நிறுவனத்திற்கு சான்றோன் எனக் கேட்ட தாயின் உணர்வை தர துணிந்தோம். இதொ செயல்பட்டும் வருகிறோம். இந்த உலகத்திலிருந்து நாங்கள் பெற்றதை, இவ்வுலகத்திற்கே திரும்ப தரும் முயற்சியில் நாங்கள்.

     எங்களுக்கு என்று தனி அலுவலகம் ஏதுமில்லை. இது பதிவு செய்யப்பட்ட நிறுவனமே ஆயினும், சேவை என்பது தேவை உள்ளவர்களின் தேவையை சந்திப்பதிலேயே அடங்கியிக்கிறது என்று நாங்கள் புரிந்துக்கொண்டதின் பேரில் தேவையுள்ளோர் எங்களை சந்திப்பதில்லை, தேவையுள்ளோரை நாங்களே சென்று சந்திக்கிறோம், அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். எங்களால் முடிந்தவரை அவர்களின் தேவைகளை எங்கள் நண்பர்கள் எங்களுக்கு செய்யும் பண உதவிக்கொண்டு நிறைவு செய்ய முனைகிறோம்.
     இதில் எங்கள் பணிகளை தேவையற்றது என்று ஏளனம் செய்தவர்களும் கூட தற்போது வியந்து ஆச்சரிப்பது எங்களின் தொடர் பயணத்தின் ஊக்குவிப்பாக உள்ளது.


இதுவரையில் எங்களுக்கு உதவி புரிந்த நண்பர்களின் பட்டியல்

செல்வன். மதன்பிரசாத்
திருச்செங்கோடு

செல்வன். சம்பத்குமார்
சிங்காரப்பேட்டை

திரு.சுந்தரமூர்த்தி
பத்திரிக்கை நிருபர்
செங்கம்

திரு.கார்த்திகேயன்
வட்டாட்சியர்
செங்கம்.

திரு.கோபு
துணைவட்டாட்சியர்
செங்கம்

திரு.காசிநாதன்
துணைவட்டாட்சியர்
செங்கம்.

திரு.முருகன்
இளநிலை உதவியாளர்
செங்கம்

திருமதி. கலைச்செல்வி
தட்டச்சர் பொதுபணிதுறை
திருவண்ணாமலை

திருமதி. மெர்சிசந்திரகுமாரி
ஹோம்கார்ட்
திருவண்ணாமலை

திரு.அன்புராஜ்
கலை குளிர் பான கடை
செங்கம்

திரு. சதீஷ்குமார் எஸ்டிஒ
பாரத்சஞ்சார்நிகாம் லிமிடெட்
காட்பாடி.

செல்வன்.ரமேஷ்பாபு
பிக் பஜார்
செங்கம்.

எங்கள் பணி சிறக்க உதவிய அனைத்து நண்பர்களுக்கும் இக்கட்டுரையின் வாயிலாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தற்போது படித்துவிட்டிருக்கும் பெரும்பாலான மாற்றுதிறனாளிகளுக்கு வேலை இல்லை. கிராமபுறங்களில் வசிக்கும் மாற்று திறனாளிகள் படித்திருக்கவில்லை. இவ்விரு பிரிவினரும் பயனடையும் வகையில் கல்விகூடம் மற்றும் தொழிற்கூடம் அமைக்கும் எங்கள் புதிய முயற்சியில் உலக நண்பர்களாகிய தங்களின் பங்கேற்றல்களையும் எதிர்பார்க்கிறோம். இது ஒரு கூட்டு முயற்சியே...இதில் பணியாற்றிவரும் எங்கள் மூவரால் மட்டுமே இதனை திறம்பட நிறைவேற்றிவிட இயலாது.

தங்களின் ஆலோசனைகளையும், உதவிகளையும் எதிர்பார்க்கிறோம். 

தொடர்புகொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி
அலைபேசி எண்
9489703378
9524753459

1 comment:

  1. ஆதரவு தரும் நல் உள்ளங்கள் உலகெங்கும் உண்டு. உங்களின் நம்பிக்கை வீண் போகாது! எல்லாம் வல்ல கிருஷ்ணன் அருளால், எல்லாம் நல்லவிதமாகவே தொடரும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete