நீ இன்றி நான் இல்லை

Posted by G J Thamilselvi On Thursday, 30 August 2012 2 comments


நீயின்றி நான் இல்லை நெஞ்சமே
உன் நினைவின்றி உயிரில்லை தஞ்சமே
வார்த்தை காதலுக்கு வழியில்லை
நிகழ்வின் உயிர்பொருள் காதல் எல்லை
இருள் என்றொரு இடமில்லை
ஒளியின் குறை பொருள்
இருளின் எல்லை
வெம்மை இல்லா இடமில்லை
தண்மைக்குள்ளும் வெம்மை நிகழ்வெல்லை
காதலுக்குள் நட்பும் கலந்திருக்கும்
நட்பின்றி காதல் எங்கு வாழ்ந்திருக்கும்
காதல் இல்லா உலகு உண்டோ
காதல் இல்லா உறவும் உண்டோ
மழலைக்குள் மதுகிரக்கம் காதலின்
உணர் உருக்கம்
மொழிக்குள்ளே புதைந்திருக்கும்
உணர்வுகளில் விழி நெருக்கம்
காலத்தை கடத்திட நெஞ்சில்
காதலது வேண்டாமா?
காதலில்லா உறவினூடே
காலம் தள்ள முடியுமா?
வெறுப்பை மனதில் மறைத்து
உனை ரசிப்பது எங்கே
முன் நிறுத்து
காதல் வந்த பின்னே
அதன் கரை தொட மனதினில்
முனைவிருக்கும்
அதை கரைத்திட மனதிற்குள்
வலியே மிகும் வலியே மிகும்
விட்டு விடு என்னை இங்கே
இந்த விதமே
உன் நினைவுகள் தாங்குவதே
எந்தன் சுகமே

2 comments:

  1. அருமையான காதல் உணர்வு நீயின்றி நானில்லை... அருமை சகோ....

    ReplyDelete