என் பத்திரிக்கையின் முதல் பக்க செய்தி

Posted by G J Thamilselvi On Sunday, 12 August 2012 4 comments
திருப்பூர் இளைஞனின் சாதனை
எனக்கு தெரிந்து இது போன்ற செய்திகளை செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் அச்சிடவேண்டும். அதைவிட்டுவிட்டு மூன்றாம் பக்கத்தின் மூலையையோ அல்லது கடைசி பக்கத்தையோ அலங்கரிக்கச் செய்கிறார்கள். இளைஞர்களின் கண்டுபிடிப்புகளையும் படைப்புகளையும் தான் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அதை விட்டுவிட்டு கொலை கொள்ளை அரசியல் தெருக்கூத்துக்கள் ஆகியவற்றையே முதல் பக்கச் செய்தியாக்குகிறார்கள்.

திருப்பூர் இளைஞனின் சாதனையை பாராட்டி வாழ்த்தவும் தோன்றியதால் அவரைக்குறித்த செய்தியை இங்கு பதிவிடுகிறேன். இளைஞர்கள் இது போன்ற கண்டு பிடிப்புகளையும், சிறந்த படைப்புகளையும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை ஆக.12 சூரிய ஒளியில் இயங்கும் சைக்கிள் ரிக்ஷாவை வடிவமைத்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி சிவராஜ் முத்துராமன் (26) சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத சைக்கிள் ரிக்ஷாவை வடிவமைத்துள்ளார். சூரிய சக்தி, மற்றும் மின் சக்தி மற்றும் மிதிப்பான் மூலம் இதனை இயக்கலாம். மின்சாரம் மூலம் 3 மணிநேரம் சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் ஓட்டலாம். மணிக்கு 45கிமீ வேகத்தில் செல்லும் திறனுடையது. இந்திய புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகததில் இந்த பசுமை வாகனம் பதிவாகி உள்ளது.

இது குறித்து சிவராஜ் முத்து ராமன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.

வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுபுற சூழலுக்கு வாகன புகை மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே மாசில்லா பசுமை வாகனத்தை கடந்த இரண்டரை ஆண்டு ஆய்வுக்கு பின் உருவாக்கி உள்ளேன். சைக்கிள் ரிக்ஷா வடிவிலுள்ள எனது வாகனம் 120கிலோ எடை கொண்டது. மூன்று பேர் பயணம் செய்யலாம். சொந்த உபயோகத்துக்கும் பயன்படுத்தலாம் வாடகைக்கும் ஓட்டலாம். விணிக ரீதியில் உற்பத்தி செய்யும் போது ரூ.50ஆயிரத்துக்கு கொடுக்க முடியும். இந்த வாகனத்தை உற்பத்தி செய்து தர பல்வேறு நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன. சூரிய ஒளி, மின்சாரம் மற்றும் மிதிப்பதன் மூலம் இந்த வண்டியை இயக்கலாம்.

இவ்வாறு கூறினார். இந்த சைக்கிள் ரிக்ஷாவை பில் ரோத் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மனோஜ் பீனோ அறிமுகப்படுத்தினார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழை அதன் நிர்வாகி விவேக் ராஜா வழங்கினார்.
இந்த செய்தி இன்றைய தினகரன் செய்தி தாளில் வெளியாகியுள்ளது.

நன்றி தினகரன்


4 comments:

 1. வாழ்த்துக்கள் .... சாதனையாளருக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கு.. பத்திரிக்கையில் நடிகையின் கிசு கிசு போடா இடமில்லாமல் இருக்கும் போது இதெல்லாம் போடுவார்களா?? அவர்கள் தவறு மட்டுமல்ல அதை படிக்கும் மக்களின் ரசனையும் அவ்வாறே ஆகி போனது இப்போதெல்லாம்......

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 3. தமிழனின் பெருமையை பறைசாற்றும் பகிர்வு! அவசியம் அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயம் இது! பகிர்விற்கு நன்றி!
  http://www.krishnaalaya.com
  http://www.krishnalaya.net

  ReplyDelete
 4. ம் என்னை போன்ற இளைஞர்கள் படிக்க வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete