அது மிக ரகசியம்

Posted by G J Thamilselvi On Monday, 6 August 2012 4 comments
அது மிக ரகசியம்
யாரிடமும் பகிர முடியாத உண்மை
தாயிடமோ தந்தையிடமோ
அவர்களால் ஒற்றுக்கொள்ள
முடியாத கூற்றின் சாயல் அது
ஒரே வயிற்றில் வந்த உறவுகளிடமோ
நிச்சயம் முடியவே முடியாது

அது மனதிற்குள் பத்திரமாய்
காப்பற்றப்பட வேண்டியது
அது மிக மிக ரகசியம்
அது ஒருவருக்குள்ளாக மட்டுமே
புதைந்துவிட வேண்டியது
காதல் இணையிடம்
முற்றிலும் தவறு
இரகசியம் அறிந்த பின்
பறந்து செல்லக்கூடும்
பாராமுகமாய் நின்று பாடாய் படுத்தகூடும்
முற்றிலும் தனிதன்மையின் கூட்டமைப்பு
வெட்ட வெளிச்சமாக்கப்படும்
மனக்கோட்டைகளின் தாழ் திறப்பு
பதின்மராய் நின்ற போதிலும்
அங்கே இரகசியம் ஏதுமில்லை
நட்பின் அந்தரங்க ஆக்கிரமிப்பு.
அது பகிரப்பட வேண்டிய இரகசியம்.

4 comments:

 1. மனக்கோட்டைகளின் தாழ் திறப்பு
  பதின்மராய் நின்ற போதிலும்
  அங்கே இரகசியம் ஏதுமில்லை
  நட்பின் அந்தரங்க ஆக்கிரமிப்பு.
  அது பகிரப்பட வேண்டிய இரகசியம்.//

  அருமை அருமை
  ஆழ்மான சிந்தனை
  அருமையான ஆக்கம்
  சிறப்புப் பதிவு மிகச் சிறப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகளை உரித்தாக்குகிறேன் தங்களின் கருத்துக்களில் த.ம2 என்று குறிப்பிடுகிறீர்களே அது என்ன வென்று அறிந்து கொள்ளலாமா?

   Delete
 2. நட்பின் உரிமை இந்த கவிதையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது

  ReplyDelete