பாரத தமிழ் மறத்தி

Posted by G J Thamilselvi On Thursday, 9 August 2012 6 comments
ஓ எத்தனை அழகு
 வியப்புறலாம்
அன்பு பாராட்டி
ஆசை நீருற்றி
காம கனிரசத்தை
அள்ளி பருகலாம்
நிகழ்ந்ததும் நின்
செயல் மாற்றம் புரியலாம்
கேவலமான பார்வையால்
உதாசீனப்படுத்தலாம்
வார்த்தைகளை கொட்டி
அமிலம் புகட்டலாம்
ஈட்டிகளை எய்து
குத்தி ரசிக்கலாம்
கற்பை தாயமாக்கி
கொய்து கசக்கலாம்
தப்பும் தவறுமாய்
புரிதல் பகறலாம்
பத்தினி தன்மையின்
பழம் பெருமை பேசலாம்
எத்தனை நடந்திடினும்
கண்ணீர் உகுத்திங்கு
காலடியில் தவங்கிடக்க
பாமரத்தி அல்ல நான்
பாரதியின் பைங்கிளி
பட்ட மரமென்று
நாற்சுவர் கூட்டுக்குள்ளே
அடங்கி மருகும்
பத்தினி பிம்பமல்ல
சுட்டெரிக்கும் சுடர்ஒளியின்
எரி நெருப்பு
தொட்டு பார் தெரியும்
உன் தலை நசுக்க
என் கால் கட்டை விரல்
போதுமென்று
பெண்மை போற்றும்
பாரத தமிழ் மறத்தி
இவளின் வீரம் புரியும்.


6 comments:

 1. அருமையான வார்த்தைப் பிரயோகங்கள்
  படிக்கையிலேயே நெஞ்சுக்குள்
  ஒரு பெரும் நெருப்பு பற்றி எரிவது போல் உள்ளது
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நெருப்பு எரிகிறது..

  ReplyDelete