அவனும் அவளும்

Posted by G J Thamilselvi On Monday, 6 August 2012 3 comments
மாலை மயங்கும்
நிலாவின் நீல வான பயணத்தில்
மிதமான இருள் தேடி
அவனும் அவளும்
புதர்கள் இல்லா புல்தரையின் மடியில்
காதலை பகிர்ந்த நொடிகள்

இசைந்து இலகுவாய்
தோள் சாய்ந்த பொழுதுகள்
மௌன மொழியால் மட்டுமே
மனம் பேசிய வார்த்தைகள்
விலக மனமின்றி விதிர்த்து நின்றதும்
தழுவ துணிவின்றி சாய்ந்துக்கொண்டதும்
பிரிந்த போது காதலால் பிணைந்துகொண்டதும்
இறந்த காலத்தின் இறுதியில்
பதிவாய் மட்டும் நின்று போக
இன்றோ திசைக்கொருவராய்
ஒவ்வாத துணையோடு கடந்து போகிறது
வாழ்க்கை காதல் இல்லாமலே.

3 comments:

 1. இறந்த காலத்தின் இறுதியில்
  பதிவாய் மட்டும் நின்று போக
  இன்றோ திசைக்கொருவராய்
  ஒவ்வாத துணையோடு கடந்து போகிறது
  வாழ்க்கை காதல் இல்லாமலே.//

  மனம் தொட்ட வரிகள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பல காதலர்களின் நிலை இதுவே!
  நன்று!!

  ReplyDelete