பெண்கள் தேவையில்லை ஆண்களே போதும் இந்த தலைப்பில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதன் விவரம் கீழே குறிப்பிட்டுள்ளேன். இந்த கட்டுரையின் குறிப்புகள் இனயம் தாஹீர் வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது (http://www.enayamthahir.com/2011/12/blog-post_29.html)
குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றனர். ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண் துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போதுஸ்டெம்செல்மூலம் பல அரியவகை அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. “ஸ்டெம்செல்சிகிச்சையின் மூலம் கொடிய நோய்கள் கூட குணப்படுத்தப்பட்டு வருகின்றன

இந்த அதிநவீனஸ்டெம் செல்தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகள் மூலம் குட்டி எலிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். டெக்சாஸ் இனப்பெருக்க விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் மனிதர்களிலும் பெண் துணையின்றி ஆண்களே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போன்று ஆண்கள் இல்லாமல் பெண்களே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இது ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு வசதியாக அமையும்.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
ஒரு கிறித்துவ மாத இதழ் படிக்க நேர்ந்தது அது பின்வருமாறு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது

இந்தியாவிற்கு ஆபத்து… ஓர் அவசர ஜெப அழைப்பு! பாளையங்கோட்டையில் கூட்டு பிரார்த்தனை!

  ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்தும், ஓரினச் சேர்க்கையை தடை செய்யும்படியாகவு், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி…

இந்த மாதிரியான வாசகங்களோடு,

எனக்குள் எழுந்த கேள்விகள்

 1. கிறித்துவர்களின் முக்கிய குறிக்கோள் என்ன?
 2. பிரார்த்னை செய்வதால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மாறிவிடப்போகிறார்களா?
 3. உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பை மாற்றிக்கொள்ள போகிறதா?
 4. சட்டம் இயற்றி அனுமதி அளிக்காத நாட்களில் மட்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இல்லையா?
 5. ஒவ்வொரு கதவையாக தட்டி யார் யார் ஓரின சேர்க்கை கொண்டுள்ளீர்கள் கேட்டு தண்டனை அளிக்க முடியுமா?

இதை போன்ற தகாத நடவடிக்கைகளால் போதனைகளால் மூளை சலவை செய்து மக்களை ஏமாற்றி தங்ளை விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த கூட்டத்திற்கான செலவுகளை வேறு வழிகளில் செலவிட்டிருக்கலாமே முதலில் வயிறு நிரம்பின பிறகே மற்ற செயல்கள் தொடங்கும்…இங்கு வயிற்றிற்கே வழியில்லாத எத்தனையோ ஏழை எளிய மக்கள் இருக்க இருட்டறையில் நடந்துக்கொண்டிருக்கும் சில முரண்பாட்டு தோற்றங்களை வெளியரங்கமாக்கி இந்தியாவிற்கு மாபெரும் ஆபத்து வந்து விடுவதை போன்று தோற்ற பிம்பத்தை ஏற்படுத்துவானேன்.

எல்லாமே இயற்கை எனும் போது மனித மூளைக்கு எட்டாத முரண்பாடுகளை கட்டிக்கொண்டு பாமரமக்களை திசை மாற்றி வழி நடத்துவது தான் கிறித்துவ போதனையா?

ஓரினச்சேர்க்கையாளர்கள் காலங்காலமாய் இருந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். செய்தி தொடர்பு ஊடகங்கள் குறைவான காலங்களில் அதை பரவலாக அறிந்துக்கொள்ள முடியவில்லை.

தற்போது தொடர்பு சாதனங்கள் பெருகிவிட உலகம் குறுகி உள்ளங்கையில் வந்து விட்டது.

ஓரினச்சேர்க்கைக்கு எதிராய் கொடி தூக்குவதால் என்ன சாதிக்க போகிறார்கள். எதை சொல்ல விரும்புகிறார்கள்,?  தாங்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடவில்லை என்பதையா?

சரி தவறு என்று ஒரு விவாத பொருள் எடுத்து வாதிட நான் வரவில்லை. இது தேவை இல்லை என்கிறேன். இது நம் சந்ததிக்கு அவசியம் இல்லை. இப்படி அறிவித்து அவர்களையும் கஷ்டப்படுத்தி தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தி வருங்கால இந்தியா மாபெரும் ஆபத்தை எதிர்நோக்க செய்கிறார்கள்.

இந்த கிறித்துவ பத்திரிக்கையை என்னிடத்தில் கொண்டு வந்து தந்தது என் மகளின் பள்ளி தோழன் அருண்குமார், ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் அம்மா இவர்கள் எதற்காக பிரார்த்தனை செய்ய போகிறார்கள் ஓரினச்சேர்க்கை என்றால் என்ன என்று கேள்வி எழுப்புகிறான் என்ன பதில் சொல்வது?

குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் இருந்தால் என்ன செய்வோம். நம் குடும்ப மானம் போகக்கூடாது என்று அவர் தவறுகளை பிறர் அறியாவண்ணம் மறைப்போம். இந்திய குடும்பத்தில் நடக்கும் மறைக்கப்பட வேண்டியவற்றை இப்படி பகிரங்கப்படுத்திக்கொண்டு அதற்காக பிரார்த்தனை கூட்டங்கள் நடத்திக்கொண்டு தங்களின் தரத்தை கீழ்படுத்திக்கொண்டிருக்கவேண்டாம் என்பது என் கருத்து.


14 comments:

 1. இந்திய குடும்பத்தில் நடக்கும் மறைக்கப்பட வேண்டியவற்றை இப்படி பகிரங்கப்படுத்திக்கொண்டு அதற்காக பிரார்த்தனை கூட்டங்கள் நடத்திக்கொண்டு தங்களின் தரத்தை கீழ்படுத்திக்கொண்டிருக்கவேண்டாம் என்பது என் கருத்து.//

  நீங்கள் சொல்வது மிகச் சரியான கருத்து
  நம் மக்கள் இன்னும் வெளி நாட்டினரைப்போல்
  இது விஷயத்தில் பக்குவப்படவில்லை
  என நினைக்கிறேன்.அதுவரை இதனை
  தெருவுக்கு கொண்டுவருதல்
  தேவையற்றகூடுதல் குழப்பத்தைத்தான் தரும்
  தெளிவூட்டும் பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக ?

  கர்த்தரை வ‌ழிப‌டாத‌ ஆண்க‌ள் பெண்க‌ள் மீது தண்டணையாக‌ கட்டுக்கடங்காத காமத்தீயை பற்றி எரிய செய்து இழிவான பாலுணர்வு அதிக‌ரிக்க‌ செய்து அவர்களை தகாத ஓரினசேர்க்கை உறவு கொள்ள விட்டு விட்டார் கர்த்தர்.. – பைபிள்.

  புதிய ஏற்பாடு. NEW TESTAMENT.

  பைபிள்: உரோமையர். 1 அதிகாரம் ஸ்லோக‌ங்கள் 21 – 28
  BIBLE: ROMANS CHAPTER 1. VERSES 21. -28

  READ MORE >>> கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணை <<<<<

  .

  ReplyDelete
  Replies
  1. கர்த்தர் தண்டிக்ககூடியரா? தண்டிக்கக்கூடியவர் என்றால் அவர் ஏன் அனைவருடைய பாவங்களுக்கும் மரணிக்கவேண்டும். அவர் இரக்கங்களின் தேவன் என்றும் வேதாகமத்தில் தான் எழுதப்பட்டிருக்கிறது.

   நீங்கள் மேற்குறிப்பிட்ட வசனம் ரோமபுரியில் வாழ்ந்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஊழியக்காரனாகிய பவுல் கடிதம் மூலமாக எழுதியது. அவர்கள் செய்த ஓரினச்சேர்க்கையை குறித்து அவர்களை கண்டிக்கும் விதமாக எழுதப்பட்டது. இது சேட்டை செய்யும் குழந்தைகளை இருளில் அரக்கன் இருப்பதாகவோ பேய் பிசாசு இருப்பதாகவோ சொல்லி பயமுறுத்துவதற்கு ஒப்பானதே தவிர வேறு இல்லை.

   Delete
  2. சரி உங்கள் கூற்றுபடியே தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது. அது சகலத்தையும் படைத்த சர்வ வல்லவருடைய தண்டனை அதற்காக மனிதன் என்ன செய்யப்போகிறான்? ஓரினச்ரே்க்கை அசுத்தமானது எனும்போது பரிசுத்தமான இதயத்திலிருந்து அது ஏன் வரவேண்டும். அதைபற்றி இங்கென்ன பிரார்த்தனை வேறு...பிரார்த்திப்பதை நிறுத்தி விட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு அல்லவா உணர்த்த வேண்டும். இயேசுவே அவர்களுக்கு மனமிரங்கும் என்பதோ, இயேசுவே அவர்களை தண்டியும் என்பதோ இரண்டுமே கர்த்தருக்கு அருவருப்பானதே...உன்னை போல் பிறனை நேசி என்றாரே...உங்களை எப்படி நேசிப்பீர்கள்? நான்கு சுவருக்குள் உன் ஜன்னல்களை சார்த்தி உனக்கும் உன் தேவனுக்கும் வெளியரங்கமா பிரார்த்தனை செய் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே பிரார்த்தனை எங்கே செய்யப்படுகிறது.

   Delete

  3. பைபிள் புதிய ஏற்பாடு. BIBLE NEW TESTAMENT.

   பைபிள்: உரோமையர். 1 அதிகாரம் ஸ்லோக‌ங்கள் 21 – 28
   BIBLE: ROMANS CHAPTER 1. VERSES 21. -28

   21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

   Because that, when they knew God, they glorified him not as God, neither were thankful; but became vain in their imaginations, and their foolish heart was darkened.

   22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

   Professing themselves to be wise, they became fools,

   23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

   And changed the glory of the uncorruptible God into an image made like to corruptible man, and to birds, and fourfooted beasts, and creeping things.

   24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

   Wherefore God also gave them up to uncleanness through the lusts of their own hearts, to dishonour their own bodies between themselves:   25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

   Who changed the truth of God into a lie, and worshipped and served the creature more than the Creator, who is blessed for ever. Amen.

   26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.

   For this cause God gave them up unto vile affections: for even their women did change the natural use into that which is against nature:

   27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.

   And likewise also the men, leaving the natural use of the woman, burned in their lust one toward another; men with men working that which is unseemly, and receiving in themselves that recompense of their error which was meet.

   28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

   And even as they did not like to retain God in their knowledge, God gave them over to a reprobate mind, to do those things which are not convenient;


   .
   http://bibleunmaikal.blogspot.sg/2010/07/blog-post_27.html


   Delete
  4. அதை ஏன் அவங்க செய்றாங்க, கடவுள் ஒப்புக்கொடுத்தாரா இல்லையா, தண்டனையா தண்டனையில்லையா அதைப்பற்றி நான் விவாதிக்க வரவில்லை...ஒரினச்சேர்க்கை நம் சந்ததிக்கு தேவையில்லை எனும்போது அதை ஏன் விளம்பரப்படுத்தி இளையதலைமுறையிரிடத்தில் அறிமுகப்படுத்துகிறீர்கள். நீங்கள் பிரார்த்தனை செய்வதால் மாற்றங்கள் உண்டென்று விசுவாசித்தீர்கள் என்றால் பஞ்சமில்லாத ஒரு உலகத்திற்காக, அன்பான ஒரு உலகத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள்...நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய நல்ல விடங்களுக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள் ஸ்தோத்திரம் என்பது அநேகருக்கு விளங்காத ஒரு வார்த்தையாக இருக்கிறது ஸ்தோத்திரம் என்றால் நன்றி தானே....நீங்கள் மேற்குறிப்பிட்ட அந்த நிருபம் எழுதப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் அப்போதிருந்தே கிறித்துவர்கள் இதற்காக பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள் என்றால் இன்னமும் ஏன் அது நீங்கிய பாடில்லை. கிறிஸ்துவை தினம் தினம் சிலுவையில் அறையாதீர்கள். அவர் மரணத்தை மட்டுமல்ல பாவங்களையும் ஜெயித்தார். அன்பை உலகுக்கு அறிவிக்கவென ஏற்படுத்தப்பட்ட அமைப்பை பாவங்களை விளம்பரப்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டாம்.

   Delete
 3. என்ன சொல்வது...? இது விளம்பரங்களின் யுகம். தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று தாய்க்கே விளம்பரங்கள் கொடுத்துத் தான் போதிக்க வேண்டியிருக்கிறது. இந்த விளம்பரங்கள் தொடக்கம் தான். இன்னும் இது இந்தியாவை மட்டுமில்லை, உலகையே எங்கே கொண்டு செல்லப் போகிறது என்று யாருக்கும் தெரியாது.

  ReplyDelete
 4. வணக்கம் சகோ,

  நல்ல பதிவு.மூன்றாம் பாலினத்தவர் என்பதும் ஒரு இயற்கையின் விபத்து என்பதும்,அவர்களுக்கும் தங்கள் உணர்ச்சிகள்க்கு வடிகால் தேவை என்பதை உணர்தலும்,அவர்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்து,சமுதாயத்தில் சிக்கல் இன்றி வாழ வழி செய்ய வேண்டும்.

  இதில் மதவாதிகளின் கருத்தான் இவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள்,குணப்படுத்த, பிரார்த்தனை மூலம் மாற்ற முடியும் என்பவை தவறு.


  அவர்கள்க்கு ஒரு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்கும் எண்ணம்,செயல் அவர்களை அவர்களின் இயல்பின் அடைப்படையில் ஏற்றுக் கொள்வதில் இருந்து மட்டுமே தொடங்க இயலும்.

  இதில் பிரார்த்தனை செய்து குணமாக்குவோம் என்பது மத விளம்பரம் மட்டுமே!!!


  நன்றி!!!!!!!!!

  ReplyDelete
 5. சட்டம் அனுதுமதி அளித்தால் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகமாகிவிடுவார்கள் என்றோ, தடுத்தால் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றோ கூறிவிட முடியாது,

  ReplyDelete
 6. என் வலைப்பக்கத்தை தங்கள் பார்வைக்கு இணைத்துக் கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 7. என்னைப்பொருத்தவரையில்.. எதையாவது ஒன்றைச்செய்வோம் என்ற ஆர்வத்தில், எதிர்விளைவுகளைப் பற்றி ஆராயாமல் செய்ததால் வந்ததே இது.. ,

  //தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தி வருங்கால இந்தியா மாபெரும் ஆபத்தை எதிர்நோக்க செய்கிறார்கள்//

  மிகசாரியான கருத்து!!
  இம்மாதிரியான செயல்கலக் கங்கணம் கட்டிக்கொண்டு ஊடகங்களும் தனி நபர்களும் விளம்பரப்படுத்துவதால் ஆபத்தின் எல்லை விரிவடைந்துகொண்டே இருக்கின்றது.

  ReplyDelete
 8. வணக்கம் சகோதரி,
  என்னை பொறுத்தவரை இந்த கட்டுரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்தான். பலரும் பேச தயங்கும் இந்த விசயத்தை பற்றி தைரியமாக உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ததற்காக பாராட்டுகள். இதுபோன்ற விசயங்களில் அரசு சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  ReplyDelete
 9. கிறித்துவர்களை குறித்து தவறான கணிப்பில் இருக்கிறீர்கள் சகோதரி உங்கள் பார்வை கோணத்தை மாற்றிகொள்ளுங்கள்.

  ReplyDelete