நண்பர்கள்

Posted by G J Thamilselvi On Sunday, 5 August 2012 4 comments

எத்தனையோ காலங்கள்
கடந்த பிறகு
இன்றும் இனிமையாய்
உயிர்க்கிறது நட்பு
மழலைகளாய் நாம்
அன்பை பகிர்ந்த
நாட்கள் அவை
இனங்கள் அங்கே
இசைந்து நகர்ந்த நாழிகையில்
அன்பை மட்டுமே பகிர்ந்து
கவலைகளை துறந்து
கதை கதையாய்
கற்பனைகளில்
நமக்கே நமக்கென்று
சுய பிம்பம் தரித்து
மகிழ்ந்த காலத்தின்
மீண்டும் பயணிக்க எத்தனிக்கிறது
மனம்
வளர்ந்துவிட்டோம்
கூடு துறந்து பறந்தும்
விட்டோம்
எங்கே எப்படி இருக்கீறீர்கள்
அறிந்துகொள்ள ஆசைதான்
பறந்து வந்து
பலவாறு பழகிட துடிக்கும்
மனம் நட்பென்று வந்ததும்
பண்பட்டதை மறந்து
மழலை ஆகிறது மீண்டும்
மழலை கதப்பில்
நான் பாடிய பாடலுக்காய்
யாழினி என்று பட்டமளித்த
பெயர் இன்றும் என்
பட்ட மனதை துளிர்க்கச்செய்கிறது
நாம் பேசிக்கொண்டதுப்போல்
கருப்பு குதிரையில்
காற்று வேகத்திலோ
டப டப டப வென்று சத்தமிடும்
மோட்டார் வாகனத்திலோ
விரைந்து வந்து சந்திக்க
வேண்டியதில்லை
மாறிய காலத்திற்குள்
இன்றும் மாறாத நம் நட்பு
உள்ளத்திற்குள் எழுச்சியாய்
தனி ஒரு இடத்தில்
என் நினைவுகளில் எழுந்து
கண்களை துளிர்க்க செய்த
கண்ணீர் சொன்னது
உங்கள் நினைவுகளில் நானும்
கல்வெட்டு என்று.

(அபிஷேக்குமார், சீனிவாசன், சாந்தி, அந்தோணி, காஞ்சனா, ரவிக்குமார், ரிச்சர்ட் ஆகிய என் மழலை நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்)


4 comments:

 1. நட்பான வரிகள்..

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. மாறிய காலத்திற்குள்
  இன்றும் மாறாத நம் நட்பு
  உள்ளத்திற்குள் எழுச்சியாய்
  தனி ஒரு இடத்தில்
  என் நினைவுகளில் எழுந்து
  கண்களை துளிர்க்க செய்த
  கண்ணீர் சொன்னது
  உங்கள் நினைவுகளில் நானும்
  கல்வெட்டு என்று


  நண்பர்கள் தின சிறப்புப்பதிவு
  மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete