இரவு பகலாக...!

Posted by G J Thamilselvi On Thursday, 30 August 2012 7 comments
இந்த இரவு என்று தொலையும்
எந்தன் மனதில் என்று விடியும்
இந்த தனிமை என்று கலையும்
சொல்லடா!

எதற்காக படைத்தாய் என்னை
முன் வந்து சொல்லிவிடு
மனதிற்குள் உணர்வை வைத்த
மாயத்தை கலைந்துவிடு

அன்பென்னும் உணர்வை தந்து
இதயத்தை தின்றவனே
அன்பு மழை பொழிந்து வந்து
அணைத்துக்கொள்ள மறந்தது ஏன்?

உயிரும் உடலும் கொடுத்தாய்
உன்னில் இருப்பிடம் கொடுத்திட
ஏன் மறந்தாய்
உறவும் உலகும் கொடுத்தாய்
அங்கு அன்பினை கனித்திட
தவறிழைத்தாய்.

என்று விடியும் இந்த இரவு
என்று மலரும் அந்த
பொன் உறவு.

7 comments:

 1. அன்பிற்காக ஏங்கும் வரிகள்...

  நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நல்லதொரு கவிதை!

  இன்று என் தளத்தில்
  குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

  ReplyDelete
 3. அன்பில் நிறைந்து படைத்தவனையே கேள்வி கேட்கும் அருமையான கவிதை. ரொம்ப ரசிச்சுப் படிச்சேன். சூப்பர்.

  ReplyDelete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 5. (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி விட்கேட் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நிறுத்தி வைக்கவும்... (Edit html and Remove Indli Widget) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

  ReplyDelete
 6. வணக்கம் நண்பரே!

  உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

  தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
  யாழ் மஞ்சு

  ReplyDelete