அன்பை தேடி...

Posted by G J Thamilselvi On Friday, 3 August 2012 4 comments

இதோ இந்த பிரமாண்ட வெளியில்
என் நெடுந்தூர பயணம்
என் பாத சுவடுங்களை
இப் புவியில் பதிந்து
கடந்த தூரங்கள்
என்னை இளைக்கச்செய்கிறது
வந்துவிட்டேன்

உள்முகமாக
யாருமில்லா தனி பெரு வெளியில்
மீண்டும் வெளி வர
எத்தனிக்கவில்லை மனம்
என் நிழல் மட்டுமே
என்னுடன்
உன்னை தான் தேடினேன்
எனக்குள் ஒன்றி விட்ட உன்னை
வெளியில் தேடினால்...
கிடைக்கவில்லை
பின்புதான் புரிந்தது
எனக்குள் உயிர்த்தவன்
நீ என்று...

4 comments: