அணுகல் மறுப்பு

Posted by G J Thamilselvi On Friday, 31 August 2012 0 comments
கொஞ்சும் சிருங்கார தமிழ் பைங்கிளி
என்னை நெருங்காமல் நெருக்கம் கொள்ளடி
விழி அசைவில் ஒரு சிலிர்ப்பிருக்கும்
உன் மொழி வடிவில் உயிர் பிறக்கும்
இதழ்களிலே கனிவிருக்கும்

மனதினிலே சக்தியின் துணிவிருக்கும்
அழகான கன்னம் ரெண்டும்
முத்தம் வைக்க இதழ்கள் கெஞ்சும்
தலை கோத விரல்கள் துள்ளும்
உன் கேசம் மனதை அள்ளும்
உன் வாசத்தில் மனம் கிறக்கம் கொள்ளுமடி
உன் சகவாசத்தில் தினம் உறக்கம் தள்ளுபடி
இடையோடு கரங்கள் மிஞ்ச
இதழோடு இதழ்கள் கொஞ்ச
விழியோடு காதல் கொஞ்சம்
மொழியோடு மயக்கம் எஞ்சும்
இளமைக்கு தினங்கள் பஞ்சம்
முதுமைக்குள் காமம் தகருமடி என் அன்பே
உறவாட உயிராக கொஞ்சம் கொடு காலம்
என் உயிரோடு உயிராக
பிணையும் அந்த நேரம்
இருவரும் கை கோர்த்து நடப்போம்
உடல்களின் மின்சாரம் ரசிப்போம்
கதைகளை கவியோடு பேசி
யுகங்களை எப்போதும் கடப்போம்
நட்புடன் காதலில் பிறப்போம்
தாய்மையில் கனிவோடு கலப்போம்
கற்பு நெறி தவறாமல் சுகிக்போம்
அன்பையே சட்டமாய் வகுப்போம்
என் சிருங்கார தமிழ் பைங்கிளி
ஏனடி அணுகல் மறுப்பு
அனுமதி கொடுத்திடு எனக்கு.

0 comments:

Post a Comment