காதல் அணிவகுப்பு

Posted by G J Thamilselvi On Friday, 3 August 2012 2 comments
உன் காதல் கரங்களின்
அரவணைப்பில்
என் பெண்மை
குளிர்ந்து போகிறது
உன் ஆண் தத்துவத்தில்
ஒடுங்கி போகும்
எனக்குள் தான்
எத்தனை களிப்பு
நீ தரும் பதவி மாற்றத்தில் தான்
எத்தனை சுகிப்பு
இந்த நொடியின் நிகழ் புள்ளியில்
எதிர்காலம் ஒடுங்கிபோன
தந்திர யுக்தியை
உன்னிடமே கற்றேன்
உன் கூட்டிற்குள்
நான் நெகிழ்ந்து கிடக்க
என் அன்பின்
ஒளிக்கதிரில் ஒளிர்ந்து
வர குட்டியாய்
உன்னை போன்று
என் குட்டி காதலன்
மழலை பேசி என் வாழ்வின்
மையம் கொண்ட
பிரபஞ்ச இளவரசன்
உனக்குள் பொறாமை தீயை
மூட்டி விட்டு
உனை பாடாய் படுத்தும்
அழகு ராட்சன்
ஆனாலும் கூட
உனக்குள்  நானும்
எனக்குள் அவனுமாய்
ஒடுங்கி போக ஒரு
பாதுகாப்பு வட்டத்திற்குள்
பிரபஞ்ச விதியின் விளையாட்டு
இது உயிர் படைப்பின்
காதல் அணி வகுப்பு

2 comments: