விட்டு விடு நட்பே என்னை

Posted by G J Thamilselvi On Tuesday, 28 August 2012 9 comments
என் உயிர் மூச்சை உனக்காக
நான் கொடுப்பேன்
என் உள்ளத்தை அதற்குள்ளே
வார்த்திருப்பேன்

நட்பென்று நானும் வந்தேன்
காதலென்று சொன்னதி்ல்
துவண்டேன்.
அன்பினை கொடுத்திட வந்தேன்
காமத்தை கலந்திட தவித்தேன்
முடியாத செயல் ஒன்றை
நிகழ்த்திட துணிந்தாயே
உயிர் பூவை எனக்குள்ளே
கசக்கிட முனைந்தாயே
தவறாத எனக்குள்ளே
தவறை கண்டேன்
உயிர் பூவே என்னால் நீ
தவிக்கக்கண்டேன்
விடைசொல்ல முடியாமல்
விலகிச்சென்றேன்
உனை கொல்ல முடியாமல்
மருகி நின்றேன்.

9 comments:

 1. மிகவும் அருமை...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

  ReplyDelete
 2. அருமை. தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அருமை அருமை கடைசி வரி
  அன்பின் ஆழம் சொன்னது
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அருமையான கவிதை....அனுபவ உண்மையா?

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசன் தன் படைப்புகளில் உருக்கமான பாடல் வரிகள் வரும்போது அழுதுவிடுவாராம், அந்தப்படி நான் அனுபவித்து எழுதியது தான்....அனுபவ உண்மையா என்றால் இல்லை.

   Delete
 5. மிகவும் அருமையாக உள்ளது. இதயம் தொட்ட வரிகள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. கவிக்கு கனிவான அல்லது கடினமான மனநிலை (..அது சூழலால் கூட அமையலாம்..) காரணியாகும்..

  வாழ்க்கைப் பயணத்தில் கடினமான சூழலில் இருக்கும்போது கனிவைத் தேர்வு செய்து..அச்சூழலை அலைந்து திரிந்தாவது அமைத்துக்கொள்ளுதல் நல்லபலன் தரும்..

  கடினமான சூழல்...வாழ்க்கையின் கரடுமுரடையே கண்ணுக்குப் புலப்படுத்தும்...இருப்பதைப் பெரிதாக்கி பயப்படுத்தும்!

  ReplyDelete