அன்பில்லா வலிகள்

Posted by G J Thamilselvi On Monday, 27 August 2012 8 comments
உலகமே மாயை என்று
ஒதுங்கி போகும் நாட்கள் இது
உலர்ந்தது அன்பு என்று
தகர்ந்து போன மனங்கள் இங்கு
உலக சிறைக்குள் வந்து
அடைந்துவிட்டேன்

சிங்கத்தை போல
சீறி செல்ல வழியுமின்றி
தவித்தேன் காற்றாக
பாட்டாக பாடி வைத்தால்
பயன்பெறுவார் என்றொரு
உத்தேசம்
பட்டினாத்தார் கதைபோல
நெஞ்சுக்குள்ள உத்வேகம்
கொஞ்சம் இனிப்பு
கொஞ்சம் கசப்பு
அட வள்ளுவன் சொன்னது
நெஞ்சிலே உள்ளது
துன்பம் வரும் வேளையிலே
நகைக்க முடியுமா?
பொங்கி வரும் அழுகையைதான்
அடக்க முடியுமா?
சஞ்சலத்த மனசுக்குள்
மறைக்க முடியுமா?
அகத்துக்குள்ளே மலர்ந்த சுகம்
முகமே காட்டும்
ரணத்துக்குள்ளே விழுந்துவிட்டேன்
மறைப்பதெப்படி மறந்துவிட்டேன்
உயிர் துணையை தேடிச்சென்றேன்
வழி துணையை தொலைத்து வந்தேன்
விழிக்குள் உறக்கம் விலகிகொண்டது
நித்திலமாக
நித்திரை தேவன் அணைப்பதெப்போ
நிரந்தரமாக
உயிர் பறந்து சென்றால்
உலகை துறந்தே சென்றால்
என் வலிகள் எல்லாம் என்னை
கடந்தே சென்றால்....?

8 comments:

 1. மாயை விலக்கினால் பாதை கிடைக்கும்! அருமையான கவிதை!

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
 2. அகத்துக்குள்ளே மலர்ந்த சுகம்
  முகமே காட்டும்
  ரணத்துக்குள்ளே விழுந்துவிட்டேன்
  மறைப்பதெப்படி மறந்துவிட்டேன்

  அருமையான வரிகள்

  ReplyDelete
 3. அன்பில்லா வலிகள் - கொஞ்சம் வலிக்கிறது தான் சகோ.

  ReplyDelete
 4. அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 5. அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. "நித்திரை தேவன் அணைப்பதெப்போ
  நிரந்தரமாக
  உயிர் பறந்து சென்றால்
  உலகை துறந்தே சென்றால்
  என் வலிகள் எல்லாம் என்னை"

  ஆபத்தை விளைவிக்கும் சிந்தனைவரிகள்.. கவிதையிலும் மனதிலும்...வேண்டாமே!

  ReplyDelete