அம்மா என் அழகு சிலை

Posted by G J Thamilselvi On Saturday, 25 August 2012 3 comments

அம்மா என்றொரு அழகு சிலை
அன்பாய் என்னை வளர்த்த கிள்ளை
நெஞ்சுருக நெகிழ்ந்துருக பாடுவேன்
என் எண்ணமெல்லாம்
அவள் பெயரை கூறுவேன்.
அணுவாய் வந்து குதித்தேன்
அகிலமாய் வார்த்தெடுத்தாள்
அடிக்கடி சேட்டை செய்தேன்
அழகியல் என்று ரசித்தாள்
கற்பனை கோட்டைக்குள்ளே
கற்சிலை என்றிருந்தேன்
பொற்சிலை ஆக்கி வைத்து
அவள் சுவாசத்தில் உயிர்கொடுத்தாள்
ஈன்று வர வலிக்கொடுத்தேன்
சுகமென்று சுகித்து வைத்தாள்
அழுதிட முலை கொடுத்தாள்
கடித்திட பொறுத்துக்கொண்டாள்
வாடிட உண்ண மறுத்தாள்
வாழ்க்கையாய் என்னை நினைத்தாள்
தத்தி வந்த நாட்களிலே
முத்தமிட மெல்ல சிரித்தாள்
கருங்கூந்தல் பற்றி இழுக்க
பொய்கோபம் காட்டிச் சென்றாள்
கன்னம் கிள்ளி நான் சிரித்தேன்
கண்கள் முழி தோண்டச்சென்றேன்
சின்ன இதழ் எச்சில் வழிய
முத்தமிட கிறங்கி நின்றாள்
அம்மா என்றொரு அழகு சிலை
அன்பாய் என்னை வளர்த்த கிள்ளை
நெஞ்சுருக நெகிழ்ந்துருக பாடுவேன்
என் எண்ணமெல்லாம்
அவள் பெயரை கூறுவேன்.

3 comments:

 1. அம்மாவின் சிறப்பை அருமையாக பாடியுள்ளீர்கள்! சிறப்பான படைப்பு! நன்றி!
  இன்று என் தளத்தில்
  பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
  கோப்பை வென்ற இளம் இந்தியா!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

  ReplyDelete
 2. அம்மாவைப் பற்றிய அழகான அன்பான பதிவு

  ReplyDelete
 3. வாழ்க்கையாய் என்னை நினைத்தாள்
  தத்தி வந்த நாட்களிலே
  முத்தமிட மெல்ல சிரித்தாள்
  கருங்கூந்தல் பற்றி இழுக்க
  பொய்கோபம் காட்டிச் சென்றாள்
  அழகான வரிகள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete