மகனே மனம் திரும்பு

Posted by G J Thamilselvi On Sunday, 12 August 2012 1 comments

உன்னை நேசித்தேன்
நீ என் கருவறையில்
ஜனித்த நாள் முதல்
உனக்கென்று ஒரு முகம்
இல்லாத அணுதுளியாய்
என் கர்ப்ப கிரகத்தில்
மூலவனாய் வந்த தின
நாழிகையில்
பரவசத்தின் பட்டாம்பூச்சி
என் மனமெங்கும்
தாய்மை பெயரெழுதிபோனதை
அசைபோட்டு அனுபவித்து
வலிகளையும் சுகித்து
சுகானுபவத்தில்
ஆயிரம் கனவுகளை
உனக்காக கண்டபடி
பெற்றெடுத்தேன் உன்னை
என் குலக்கொழுந்து
நீ என்று
என் வம்சம் தழைக்க
வந்தவன் நீ என்று
உன் பிஞ்சு பாதங்களை
என் கைகளில் தாங்கினேன்
என் இதயமாய்
என் கைகளில் ஏந்தினேன்
எல்லாம் சரி
இன்றொவென்றால் நீ
மதுவின் மாயவலையில்
மகனே உன் தகப்பன்
புத்தியை கேள்
உன் தாயின் போதகத்தை
தள்ளாதே
மது உன் மூளையை மழுங்கடிக்கும்
விரியன் பாம்பின் விஷம்போன்று
உன்னை சாகடிக்கும்
அதன் பக்கம் திரும்ப ஒட்டாதே
மீண்டெழுந்து வா
உன் பெலவீனங்களை
மன பலத்தால்
வெற்றிக்கொள்
மனம் திரும்பு
இன்றும் என் தாய்மை
கோட்டையில்
விலையேறப்பெற்றன் நீ

1 comment: