தாயாகினேன்

Posted by G J Thamilselvi On Thursday, 23 August 2012 16 comments


தாயாகினேன்- நீ தோள் சாய
தலைகோதி - இதழாடினேன்
முதல் மகனாய் என்னுள்
 உணர் மாற்றம் தந்தாய்
நினைவாக நெஞ்சோடு
தீயாய் சுட்டாய்
கண்ணோடு காணாமல்
கண்கள் ஏங்குது நித்தம்
உன் நெஞ்சோடு
கண் தூங்க.....
கொண்டது மனமிங்கு பித்தம்
உன் அருகாமை நிலம் துஞ்ச
பெண்மையின் விழி கெஞ்ச
இமையோரம் வழிகின்ற
நீரும் சொன்னது காதல்
நீ இதழாலே துடைக்காயோ
உள்ளுக்குள் மூண்டது ஊடல்
கொஞ்சம் அணைப்பாய் என்றே
உடல் தகிப்பாய் நின்றேன்
கவி பூவிற்குள்ளே
என் சிலிர்ப்பை சொன்னேன்
புரியாமல் சென்றாயோ
புரிந்தே தான் வென்றாயோ
கடல் நீரை போல் வந்து
அள்ளிச் சென்றாய்
இவள் விழி சேர்ந்து இணையாடி
மனம் துள்ளச்செய்தாய்.

16 comments:

 1. அருமையான உணர்வுடன் கூடிய அழகிய கவிதை தோழி! வாழ்த்துக்கள். இது என் முதல் வரவு, உங்களையும் என் தளத்திற்கு இனிதே வரவேற்கிறேன். "அந்தி நேர பூக்கள்" என் சிறுகதையை படித்து உங்களின் கருத்தை பதியவும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி, தங்களின் சிறுகதையை படித்துவிட்டேன், எதார்த்தமான எழுத்து நடை வாழ்த்துக்கள்

   Delete
 2. கொண்டது மனமிங்கு பித்தம்
  உன் அருகாமை நிலம் துஞ்ச
  பெண்மையின் விழி கெஞ்ச
  இமையோரம் வழிகின்ற
  நீரும் சொன்னது காதல்

  சந்த நயம் ரசிக்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி, மகிழ்கிறது மனம் தங்களின் பாராட்டினால்

   Delete
 3. அருமையான கவிதை. என்னவோ தெரியவில்லை காதல் ததும்பும் கவிதைகளை என்னால் படிக்க முடிவதில்லை .. நெஞ்சம் வலிக்கும் ... !!!

  ReplyDelete
 4. தாயாகினேன்- நீ தோள் சாய
  தலைகோதி - இதழாடினேன்
  முதல் மகனாய் என்னுள்
  உணர் மாற்றம் தந்தாய

  அருமையான வரிகள்
  மனம் தொட்ட அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. புரியாமல் சென்றாயோ
  புரிந்தே தான் வென்றாயோ
  கடல் நீரை போல் வந்து
  அள்ளிச் சென்றாய்

  அருமையான வரிகள். அர்த்தம் மிகுந்த வார்த்தைகள். வாழ்த்துக்கள் அக்கா. தொடருங்கள்.

  ReplyDelete
 6. அருமையான கவிதை வரிகள்!வாழ்த்துக்கள் சகோதரி

  unmaivrumbi
  mumbai

  ReplyDelete
 7. மிக நன்று!
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

  ReplyDelete
 8. உணர்வு பூர்வமான கவிதை! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  அஷ்டமி நாயகன் பைரவர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

  ReplyDelete
 9. நல்ல வரிகள்... ரசித்தேன்...

  நன்றி... வாழ்த்துக்கள்... (TM 3)

  ReplyDelete
 10. "கவி பூவிற்குள்ளே.." புகுந்த
  "என் சிலிர்ப்பை சொன்னேன்"

  ReplyDelete
 11. ம்ம்ம் எப்படியோ உங்க மனசுல இருக்குற காதலை சொல்லிட்டீங்க

  ReplyDelete