உயிரானவனே

Posted by G J Thamilselvi On Tuesday, 21 August 2012 14 comments
காதல் வந்தது எனக்குள்ளே
உனக்காக பிறந்தேன் என்றேன்
காதல் வந்தது எனக்குள்ளே
உலகத்தை ஜெயிக்கவே நின்றேன்
முத்தம் தரும் எத்தனமில்லை
முகம் நோக்க கண்கள் கொண்டேன்
சொல்லிக்கொள்ள வெட்கமுமில்லை
காதல் நண்பன் நீயே என்றேன்
நினைவுகள் சுகம் தான் எனக்கு
நிஜம் தந்த வரம் நீ எனக்கு
கனவுகள் கலைந்தது இன்று
நிஜவானம் கண்டது நெஞ்சு
உயிர்வாழும் நாட்கள் எல்லாம்
புது உலகு படைப்போம் வா
புத்தன் ஈசன் கொள்கை இல்லை
புத்துயிராய் உயிர்ப்போம் வா
பேரினம் இரண்டை கொண்டு
பிரிவுகள் சிதைப்போம் வா
உனக்குள்ளே நானாக
என் உயிர் ஜீவன் நீயாக
காதலின் மெய் தன்மை
உலகிற்காய் சமைப்போம் வா
உயிரானவனே.

14 comments:

 1. நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...

  தொடருங்கள்... நன்றி...

  ReplyDelete
 2. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  ReplyDelete
  Replies
  1. உடனே படித்துவிடுகிறேன் உங்கள் பேய்கள் ஓய்வதில்லை

   Delete
 3. கொள்ளை அழகு.

  ReplyDelete
  Replies
  1. கொள்ளை அழகின் கொள் முதலாய் நன்றி

   Delete
 4. சகோ! காதலின் வரிகள் அருமை

  ReplyDelete
 5. நிஜம் தந்த வரம் நீ எனக்கு
  கனவுகள் கலைந்தது இன்று//

  பேரினம் இரண்டை கொண்டு
  பிரிவுகள் சிதைப்போம் வா//

  அருமையான அசத்த்லான வரிகள்
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வரிகள் அருமை... தொடர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. அழகான வரிகள். அருமையான கருத்துக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete