துணிந்து தோற்கலாம் வா

Posted by G J Thamilselvi On Friday, 31 August 2012 9 comments
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம் வா
உலகை அளந்து நமக்காய் வடிக்கலாம் வா
வாழ்க்கை கடலாய் பரந்து கிடக்கு
அள்ளி பருக துணிவுமிருக்கு

எண்ணச் சிறகை மெல்ல விரித்து
பிரபஞ்ச வெளியை கையில் நிறுத்து
வாடா ராஜா வாழ்ந்து பார்க்கலாம் வா
வாழ்க்கை நமக்கே துணிந்து தோற்கலாம் வா
தோல்வியா சோகம் எதற்கு
அனுபவ பாடமிருக்கு
புதிய தொரு கற்றல் பிறகு
திட்டத்தை தெளிவாய் நகர்த்து
கசிகின்ற எண்ணங்கள் வழியே
தினம் தினம் கனவை பருகு
காட்சிகள் தெளிவாய் படைத்து
வாழ்க்கையை முன்பே நிகழ்த்து
படைப்பவன் நீயடா உன்னை
படைத்து பார் மாற்றங்கள் விளங்கும்
எண்ண விதை உன்னிலே இருக்கு
விதைத்துப்பார் அறுவடை சிறக்கும்
உலகம் வியக்கும் உன்னை
அந்த நாள் இங்கு சீக்கிரம் விரைந்து வரும்
கவலை எதற்கு கண்ணா
வெற்றி மாலைகள் உந்தன் தோள் சேரும்
சோர்வை காலில் துணிந்து நசுக்கலாம் வா
சோகம் எதற்கு துணிந்து தோற்கலாம் வா.

9 comments:

 1. அழகிய வரிகள்...

  தலைப்பு வசிகரிக்கிறது...

  ReplyDelete
 2. உற்சாகமூட்டும் கவிதை
  தலைப்பும் படமும் கூட
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அழகான உற்சாகமூட்டும் வரிகள்.
  விஜயோட புகைப்படமிருப்பதால் விஜயின் பாடலொன்றும் ஞாபகத்துக்கு வந்தது...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நல்ல கருத்துள்ள கவிதை
  இன்றையவானம். அ.தமிழ்ச்செல்வன்

  ReplyDelete
 5. தன்னம்பிக்கை வரிகள்! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

  ReplyDelete
 6. தலைப்பும் வரிகளும் அசத்தல்... நன்றி...

  ReplyDelete