புது யுக காதலன்

Posted by G J Thamilselvi On Sunday, 19 August 2012 4 comments
புதிய வார்த்தைகளை தேடுகிறேன்
உனக்கோர் கடிதம் எழுதலாம் என்று,
எத்தனை முறை எழுதினாலும்
முன்பே எவரோ எழுதிய ஒன்றாய்

முடிந்துவிடுகிறது வாக்கியம்
எழுதிய எழுத்துக்களை
கிழிக்க மனமில்லாமல்
மறுபக்கம் மறுபக்கமாய் நீள்கிறது...
எப்படி சொல்வேன்
உன் மீது நான் கொண்ட காதலை
எழுதி எழுதி என் பேனா மையும்
தீர்ந்து போகிறது
உன் மீது நான் கொண்ட
மையல் மட்டும்
சாகாவரமாய் நீள்கிறது.
காவிய காதலாய் போற்ற மனமில்லை
கலியுக காதலனாய் தோற்கவும்
துணிவில்லை
உன்னிடம் எனை உணர்த்த
வழியில்லாமல் தவிக்கும் நான்
புது யுக காதலன்.

4 comments:

 1. உன்னிடம் எனை உணர்த்த
  வழியில்லாமல் தவிக்கும் நான்
  புது யுக காதலன்.//

  அருமை அருமை
  எழுத முடியாத விஷயத்தை
  மிகத் தெளிவாக எழுதுவது கூட
  ஒரு தனித் திறமைதான்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நல்ல வரிகள்...
  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (த.ம. 2)

  ReplyDelete