கவி எழுத ஆசித்தேன்

Posted by G J Thamilselvi On Thursday, 16 August 2012 2 comments

     அது ஒரு இரவு. கருண்ட வானத்தில் மஞ்சள் புள்ளிகளாய் நட்சத்திரங்கள் மின்னின...நிழலாய் தெரிந்தது மேகம் நகர்வது. தெருவில் ஆட்களை காணும். தெரு நாய் ஒன்று ம்ம்ம் என்று முனகலோடு முடங்கிக்கொண்டது...திடீர் மாற்றம், காற்றில் வெம்மை தணிந்த குளுமை, நட்சத்திரங்கள் எங்கோ ஒளிந்துக்கொண்டன. கருண்ட வானம் மட்டும் எல்லையில்லா நீண்ட புடவையாய்...அன்னாந்து பார்க்கிறேன் அந்த வான பெண் மயிலை. அழுகிறாள்.

     அவள். ஒரு கண்ணீர் துளி என் கன்னத்தில் பட்டு சிலிர்க்க வைத்தது என்னை. அவள் அழுகைக்காக ஆனந்திக்கிறது மனம்...துக்கம் தொண்டையடைக்கவில்லை எனக்கு ஏன்? அவள் வடிப்பது என்ன ஆனந்த கண்ணீரா? நானும் சேர்ந்து குதூகலிக்க...அப்படி தான் போலும். தரையில் வழிகின்ற நீருக்குள் என் கால்கள் தாளம் போடுகிறது. நான் குமரி என்பதை மறந்து குழந்தையான அந்த கணத்தை நிறுத்தி வைக்க ஆசித்தேன். முடியவில்லை....அந்த நிமிடங்களை மீண்டு அசைப்போட்டு ஒரு கவி எழுத ஆசித்தேன், அவை அந்த நிமிடங்களாய் இருக்கவில்லை. அது வேறு நான் அசைப்போட்ட அந்த நிமிடங்கள் வேறு, என்ன  குழப்பி விட்டேனா... உண்மைதான்... அதன் பிறகு அதை குறித்து நான் கவி
எழுதவே இல்லை. நகர்ந்த நொடிகளை திரும்பி பார்த்தால் அவை நிழல்களாக மட்டுமே அவை ஒரு போதும் நிஜங்களாகவே இல்லை.

2 comments:

 1. நகர்ந்த நொடிகளை திரும்பி பார்த்தால் அவை நிழல்களாக மட்டுமே அவை ஒரு போதும் நிஜங்களாகவே இல்லை.//

  நகர்ந்த நொடிகள் நிழல்களாக அல்லாது
  சிலைகளாகப் பதிந்து போனதால்தானே
  அந்தத் தருணத்திற்கு மீண்டும் கவிதையாக
  உயிரூட்டிப்பார்த்து உணர முடிகிறது
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete