விழி திரை

Posted by G J Thamilselvi On Tuesday, 14 August 2012 4 comments
உன் விழிகளுக்குள் வியர்த்த
காதல் முத்துக்களை
என் இதயத்திற்குள் பதுக்கி
நொடிக்கொரு முறை அசைபோடும்
சராசரியாக்க எப்படி துணிந்தாய்
உன் நினைவுகளில் மூழ்கடிக்கப்பட்டு
தவிக்கின்ற மனம்
திசை அறியா படகை போல்
சுழன்று சுழன்று
வழி தேடும் பரதேசியாய்
உனை தேடுகிறது
ஒரு முறை பார்த்தாய்
தொலைந்தே போனேன்
பிறகொரு முறை பார்த்தாய்
என்றால் உயிர்த்து உன் முன்
இசைத்து நிற்பேன் போலும்
இசை ஞானியாய்
உன் முகத்திரை கிழித்து
விழித்திரை இட்டிருந்தாயானால்
இப்படி கவி பாடும் பாக்கியத்தை
இழந்தே போயிருப்பேன்.

4 comments:

 1. உன் விழிகளுக்குள் வியர்த்த
  காதல் முத்துக்களை//

  இதுவரை அறியாத புதிய
  வார்த்தைப் பிரயோகம்
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. விழித்திரை இட்டிருந்தாயானால்
  இப்படி கவி பாடும் பாக்கியத்தை
  இழந்தே போயிருப்பேன்....

  அருமை!
  வாழ்த்துக்களும், பாரட்டுக்களும்.

  ReplyDelete
 3. விழித்திரை இட்டிருந்தாயானால்
  இப்படி கவி பாடும் பாக்கியத்தை
  இழந்தே போயிருப்பேன்....

  அருமை!
  வாழ்த்துக்களும், பாரட்டுக்களும்.

  ReplyDelete