காதலின் அர்த்தம்

Posted by G J Thamilselvi On Sunday, 12 August 2012 7 comments
காதல் என்ற வார்த்தையில்
காமத்தை ஒளித்து
காவிய காதல் என்று
கற்புரம் அடித்து
இன்றோ நாளையோ

நாளை மறுதினமோ
மணப்போம் என்று சொல்லி
பேசிய போதெல்லாம்
உன் விழி பாவைகள்
கடந்து சென்ற பாதையை
பார்த்தேனும்
பாவிச் சிறுக்கி இவளுக்கு
பாடம் புரிந்திருக்க வேணும்
புதிராய் நின்றுவிட்ட
வாழ்க்கை அரிச்சுவடிகளை
தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை
காதலின் அர்த்தம் மட்டும்
உன் அகராதியிலாவது கண்டு சொல்
காதலின் அர்த்தம் காமம் மட்டுமேவா
என்று...

7 comments:

 1. மணப்போம் என்று சொல்லி
  பேசிய போதெல்லாம்
  உன் விழி பாவைகள்
  கடந்து சென்ற பாதையை
  பார்த்தேனும்
  பாவிச் சிறுக்கி இவளுக்கு
  பாடம் புரிந்திருக்க வேணும்//


  சொல்லவேண்டியதை சுருக்கமாக இருப்பினும்
  நெத்தியடியாய்ச் சொல்வது என்பது இதுதான்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //காதலின் அர்த்தம் காமம் மட்டுமே வா?
  அப்படியிருந்திருந்தால் ஒரு வார்த்தை (காதல் அல்லது காமம்)மட்டும் தானே இருக்கும். அதே போன்ற அர்த்தத்தினை மட்டும் கொடுக்கும் இன்னொரு வார்த்தை உருவாகி இருக்காதல்லவா.காமம் காதலின் ஒரு பகுதி மட்டுமே.காமத்தை தாண்டி காதலில் நிறைய இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் காமம் காதலின் ஒரு பகுதி என்பது உண்தைான், இன்றைய சமுதாயத்தினரிடையே காமம் மட்டுமே வாழ்க்கை என்றொரு மனபோக்கு வந்ததாலேயே அநேக விவாகரத்துக்ளும் காதல் தோல்விகளும் ஏற்படுகிறது...

   Delete
 3. "காதலின் அர்த்தம் காமம் மட்டுமேவா
  என்று..."

  அவ்வாண்மகனை நோக்கிக் கேட்டது சரியே...

  'காமம்' என்பது அனைவரிடமும் உள்ள ஒன்று அதனை அடக்கி தன் போக்கில் வைத்திருப்போருமுண்டு..அதன்வழி போய் சீரழிந்தவரும் உண்டு!

  ஆனால், காதல் அனைவரிடமும் உள்ளதா..தோன்றுகிறதா என்றால் இல்லை.உலகில் சிலருக்கே அவ்வாய்ப்பு!

  அதுபோலவே, காமம் அல்லாத காதலும் உண்டு!

  ReplyDelete