காதல் பயணம்

Posted by G J Thamilselvi On Friday, 3 August 2012 1 comments
உன் மனதுக்கு இதமான
இறுதி காதலியாகவே
என் வாழ்வின் நளினங்கள்
நகர வேண்டும்
உன் முதல் காதல்
பரிமாணத்தின் சிலிர்ப்பும்
சில்லிப்பும்
நான் உணராமல் போனால்
யுகங்கள் அழிந்துவிடப்போவதில்லை

உன் காதலுக்குள் கனிந்துவிட்ட கசப்பை
ஜீரணிக்க துளி சர்க்கரையாய்
என் நேசம் உனக்கு இனித்தால்
வாழ்வின் வசந்த பயனை
அடைந்துவிட்டேன் நான்
நான் சுயநலவாதிதான்
உன் ஒட்டுமொத்த
காதலின் குத்தகைக்காரி நானாகவே
உன் இறுதி காதல்
பட்டயத்தை களவாட முயல்கிறேன்
எப்போதாவது கிட்டத்திலும்
எப்போதும் விட்டத்தின்
கோடியிலும் உன் நெருக்கத்தை
ஸ்பரிசிக்கிறேன்.
உன்னை தொட்ட காற்று
என் மேனி தழுவிச்சென்றால்
உன் அணைப்பை ருசிபார்த்த
ஆதீத ஆர்ப்பரிப்பின் உணர்வுக்குள்
பயணமாகிறேன்.
காதல் வந்தால் கள்ளத்தனமும்
கள்ளமாய் வந்து
ஒட்டிக்கொள்ளும் போலும்
என் காதல் உணர்வுகளை
உன்னிடம் மறைப்பதிலேயே
என் காதல் பயணம்
தொடர்கிறது.

1 comment: