TNPSC GROUP 4 GK - 3

Posted by G J Thamilselvi On Friday, 6 July 2012 3 comments

சோழர்காலம் – சான்றுகள் – அரசர்கள்

பிற்கால சோழமன்னர்கள் கி.பி.850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதியப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கல்வெட்டுகள் ஏராளமாக காண்படுகின்றன.

மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சிமுறையை திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன.

சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன. அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றனர்.

சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.

நினைவுச் சின்னங்கள் – தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள் ஐராதீஸ்வரர் ஆலயம், திருபுவனத்திலுள்ள கம்பரேஸ்வரர் ஆலயம் ஆகியன சோழர்காலத்தின் முக்கிய சின்னங்கள் ஆகும்.
சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சின்னமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்படுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை தமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். நாணயங்கள் பற்றிய படிப்பிற்கு நாணயவியல் என்று பெயர். (Numismatics)  சோழர்களின் பெரிய புராணம் சைவ பக்தர்களை பற்றி கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார்.

ஜெயம் கொண்டாரின் கலிங்கத்து பரணி ஒட்டக்கூத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளை தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன.

உள்நாட்டு சான்றுகள் – சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகிறது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகிறது.

ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.

பிற்கால சோழ அரச குலம் – பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி, கிமு 850ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்லவ மன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்தை இவர் கைப்பற்றினார்.

உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன்பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாக இவருக்கு மதுரை கொண்டான்  என்ற பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்தால் இவர் மதுரையும், ஈழமும் கொண்டான் என்ற பட்டம் பெற்றார். இவர் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர்  பொன்வேய்ந்தசோழன் என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராம நிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது.

முதலாம் இராஜராஜ சோழன் கிபி 985 கி.பி1014

இரண்டாம் பராந்தகனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாக பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவாலங்காடு செப்பேடுக்ள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன.

இராஜராஜன் சேரரின் இராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தைச் சார்ந்த பாஸ்கர ரவி என்ற மன்னனையும் தோற்கடித்து காந்தளூர்  சாலை கலமருதருளிய என்ற பட்டம் பெற்றார்.

இவர் அமரபுஜங்கன் என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனுராதபுரத்தையும் இலங்யைின் வட பகுதியும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர பாண்டிய இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று மும்முடிச்சோழன் என்ற பட்டம் பெற்றார்.

இவர் விளிஞ்சும் என்ற பகுதியை வென்று திக் விஜயம் நடத்தினார். மாலத்தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு அருண்மொழி இராஜகேசரி போன்ற பட்டங்கள் உண்டு. இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டினார்.

இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் புத்த ஆலயம் கட்ட அனுமதி அளித்ததோடு ஆனை மங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

முதலாம் இராஜேந்திரன்

முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் பதவி ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார்.

முதலாம் இராஜேந்திரன் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.

முதாலாம் இராஜேந்திரன் வங்காள அரசன் மகிபாலனை வெற்றி கொண்டு கங்கை நீரை கொண்டு வந்தார். இந்நீர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டது. இந்த வெற்றியை போர்றும் விதமாக இராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்டான் என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.

முதலாம் இராஜேந்திரன் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார்.குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளங்குகின்றன. வினாயதித்யாவிடம் இருந்து வேங்கியின் ஆட்சியை கைப்பற்றினார்.

முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு 72 தூதர்களை அனுப்பினார். இவர் தூதர்களை அனுப்பினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மலேசியா பகுதிகளை வென்றதால் கடாரம் கொண்டான் என்ற பட்டம் சூட்டப்பெற்றது. இவரது சிறப்புகளை போற்றும் வகையில் இவருக்கு முடிகொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன் போன்ற பல பட்டங்களும் சூட்டப்பட்டன.

மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட்ட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டதால் இவருக்கு சுங்கம் தவிர்த்த சோழன் என்ற சிறப்புபட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுதகிறார். ஹெராடெட்டஸ் எனும் வரலாற்று அறிஞர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார்.

சோழர் நிர்வாகம் – உள்ளாட்சி முறை – குடவோலை முறை

சோழ அரசர்கள் மிகச்சிறந்த நிர்வாக முறையைக் கடைப்பித்தனர். மத்திய அரசு (Central Government)  மாகாண அரசு (Provincial Government) உள்ளாட்சி நிர்வாகம் (Local self Government ) ஆகிய மூன்று பிரிவுகளாக சோழ நிர்வாகம் செயல்பட்டது.

சோழர்கள் தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டிருந்தனர்.

அரசனின் தலைமையின் கீழ் மத்திய அரசு செயல்பட்டது. மேல் அதிகாரிகள் பெருந்தரம் என்றும் கீழ் அதிகாரிகள் சிறுந்தரம் என்றும் அழைக்கப்பட்டனர்.

சோழப்பேரரசு 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இந்த மாகாணங்கள் மண்டலங்கள் என்றும் அழைக்கப்பட்டன. மண்டலங்களின் தலைவர் ஆளுநர் (வைசிராய்) என்று அழைக்கப்பட்டார். அரசர்களின் நெருங்கிய உறவினர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

3 comments:

  1. சுருக்கமானவும் அழகாகவும் இருக்கிறது...

    ReplyDelete
  2. இவ்விவரங்கள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவை என்று சொல்லமுடியுமா ..

    ReplyDelete
    Replies
    1. ஆறு முதல் பத்தாம் வகுப்பு புத்தகங்களிலிருந்து மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை இந்த குறிப்புகள் நான் தேர்வுக்கு தயாரானபோது எடுத்தது பிறருக்கும் உதவட்டுமே என்று பதிவிட்டேன்

      Delete