TNPSC GROUP 4 GK 2

Posted by G J Thamilselvi On Wednesday, 4 July 2012 1 comments





முதல் பாண்டிய பேரரசு

களப்பிரர்கள் ஆதிக்கத்தை ஒழித்து பாண்டிய ஆட்சியை மீண்டும் நிறுவிய மன்னன் கடுங்கோன்.

கடுங்கோன் மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிறுவிய ஆண்டு கி.பி ஆறாம் நூற்றாண்டு.

கடுங்கோன் ஏற்படுத்திய பேரரசு முதலாம் பாண்டியப் பேரரசு.

கடுங்கோன் ஆட்சிகாலம் – கிபி.575-600.

கடுங்கோன் ஆட்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் மாறவர்மன் அவனி சூளாமணி.

மாறவர்மன் அவனி சூளாமணியின் ஆட்சி காலம் – கி.பி 600 – 625.

மாறவர்மன் அவனி சூளாமணியின் பட்டப்பெயர் சடையவர்மன்.

மாறவர்மன் அவனி சூளாமணியை, உண்மையின் தோழன் என்று செப்பேடுகள் கூறுகின்றன.



மாறவர்மன் அவனி சூளாமணிக்கு அடுத்து பாண்டியநாட்டின் அரசராக பொறுப்பேற்றவர் செழியன் சேந்தன்.

செழியன் சேந்தனின் ஆட்சிக்காலம் – கி.பி 625 – 640.

செழியன் சேந்தன் வானவன் என்று அழைக்கப்பட்டார்.

செழியன் சேந்தனின் வானவன் என்ற பெயர், அவர் சேரர்களை எதிர்த்து பெற்ற வெற்றியை குறிப்பிடுகிறது.

செழியன் சேந்தனின் பட்டப்பெயர்கள், செங்கோற்சேந்தன், வேந்தர் வேந்தன்.

செழியன் சேந்தன் நெல்லை மாவட்டத்தில் உள்ள மலையடிகுறிச்சியில் ஒரு குகை கோயிலை உருவாக்கினார்.

முதல் பாண்டிய பேரரசின் தலைசிறந்த அரசர் மாறவர்மன் அரிகேசரி.

மாறவர்மன் அரிகேசரியின் பட்ட பெயர்கள், பராங்குசன், நெல்வேலி வென்ற நெடுமாறன்.

மாறவர்மன் அரிகேசரி கூண்பாண்டியன் என்றும் நின்ற சீர் நெடுமாறன் என்றும் அழைக்கப்படுகிறார்.

பாண்டிய நாட்டின் அரசராக பொறுப்பேற்ற  செழியன் சேந்தனின் ஆட்சிக்காலம் (கி.பி. 625 – 640)

செழியன் சேந்தன் வானவன் என்றும் அழைக்கப்பட்டார்.

வானவன் என்ற பெயர் செழியன் சேந்தன் அவர் சேரர்களை எதிர்த்து பெற்ற வெற்றியால் வந்தது.

செழியன் சேந்தனுக்கு செங்கோற்சேந்தன், வேந்தர் வேந்தன் என்ற பட்டபெயர்களும் உண்டு.

செழியன் சேந்தன் நெல்லை மாவட்டத்தில் உள்ள மலையடிக்குறிச்சியில் ஒரு குகை கோயிலை உருவாக்கினார்.

முதல் பாண்டிய பேரரசின் தலைசிறந்த அரசனாகக் கருதப்படுபவர் மாறவர்மன் அரிகேசரி.

மாறவர்மன் அரிகேசரி பராங்குசன், நெல்வேலி வென்ற நெடுமாறன் என்ற பட்டங்களை பெற்று திகழ்ந்தார்.

மாறவர்மன் அரிகேசரி சைவ சமய வரலாற்றில் கூன் பாண்டியன் என்றும் நின்ற சீர் நெடுமாறன் என்றும் அழைக்கப்படுகிறார்.

மாறவர்மன் அரிகேசரி திருஞானசம்பந்தரின் அருளினால் சைவ சமயத்தை தழுவினார்.

மாறவர்மன் அரிகேசரி நெல்வேலி என்ற இடத்தில் பல்லவர்களை முறியடித்தார். இதனால் இவருக்கு நெல்வேலி வென்ற நெடுமாறன் என்ற பட்டபெயர் உண்டு.

முதல் பாண்டியப் பேரரசின் கடைசி அரசனான வீரபாண்டியன் (கி.பி 946 – 966 ) ஆதித்த சோழனால் தோற்க்கடிக்கப்பட்டு கொன்றதாக கூறப்படுகிறது. இத்தோடு முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.

முதல் பாண்டிய பேரரசின் உயர்கல்வி நிறுவனங்கள் சாலைகள் என்று அடைக்கப்பட்டன. அங்கு வேதங்கள் இலக்கணம், அரசியல், நீதி, நிர்வாகம், வானவியல் போன்ற பாடங்கள் கற்ப்பிக்கப்பட்டன. இச்சாலைகளில் இளவரசர்கள், உயர்குடியை சேர்ந்தவர்கள் கல்வி பயின்றனர். மதுரை மாநகரை தமிழ்க்கூடல் என்று அழைத்தனர். கற்களால் அமைக்கப்பட்ட கோயல்களை கற்றளிகள் என்றழைக்கிறோம்.
கற்றளிகள் என்ற கோயில்களுக்கு கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், என்ற மூன்று முக்கிய பிரிவுகளாகக் கட்டப்பட்டிருந்தன.

பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கற்றளிகளை கோயில்பட்டி, மதுரை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் காணலம். திருப்பரங்குன்றம் குகைக் கோயில் சிற்பங்கள் பாண்டியர் ஆட்சியில் சிற்பக்கலை வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகிறது.

சித்தன்னவாசல் குகைக் கோயிலின் உட்பக்க கூரைமீதும், தூண்கள் மீதும் அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அஜந்தா ஓவியங்களுக்கு இணையாகக் கருதப்படுகிறது.


1 comment:

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete