விழி நீர் சுவைத்து

Posted by G J Thamilselvi On Friday, 20 July 2012 4 comments
வார்த்தைகளால் கொல்வதற்கு
எங்கே கற்றுக்கொண்டாய்
உன் வார்த்தைகள் கூர்மையாய்
குத்திப்பார்க்கிறது
இதய கூட்டை
நீ இயல்பாய் பேசுவதும்
இமைகளை கரிக்கச்செய்கிறது
உவர் நீர் சுவையை
நாவு தினம் தினம்
ருசித்து ரசிக்கிறது.

நீ என்ன செய்வாய்
உன் காதல் விக்கிரகம்
எங்கோ இருக்க
என் உயிர்மையின் உயிர்பொருள்
நீயானது உனக்கெங்கே
தெரியபோகிறது.
ஆனாலும் ஒரு நம்பிக்கை
என் இருப்பின் மீது
வார்த்தைகளில் அல்ல
உடல் மொழி...மௌனமொழி
என்று ஆசாத்திய பரிமாற்ற
ஊடகங்களினாலும் அல்ல
என் உயிர்ப்பின் மையத்தில்
உறைந்து விட்ட
உன் உயிர்மை உனக்குள்ளாக
ஒருமையாய் உயிர்க்கும்என்று.
அங்கு நீயோ நானோ நாமோ
இல்லாத வெறுமையில்
காதல் மட்டும் வாழ்ந்திருக்கும் நன்று.


4 comments: