காதல் சிநேகிதன்

Posted by G J Thamilselvi On Tuesday, 31 July 2012 4 comments


என் முதலும் முற்றுமான
சிநேகிதன் நீ
உன் பார் நான் கொண்ட
ஈர்ப்பின் கூடுகை நீள்கிறது.
மனக்கூடு மறைபொருள் அற்று
வெளியரங்கானது
உன்னிடம் தான்
அதில் கரைபுரண்ட உணர்வுகள்
உன் காந்த கதைப்பில்
கட்டிபுரண்டு
மௌனியாக்கியது என்னை
பேச வார்த்தைகளற்று
பேசா மடந்தையான
யுகங்கள் அவை
உன் நெஞ்சருகே
பத்திரமாய் பாதுகாக்கப்பட்ட
பதுமையான உயிர்.
ஆழமான துக்கங்கள்
உன் கதகதப்பான அரவணைப்பில்
கரைந்து போனதின் மாயம்
உடல் தீண்டாமல்
மனவெளியின் மையத்தில்
காதல் கூடுகை
 பகிரங்கமாக
நீ இதழ் பதித்த நெற்றியில்
முத்து முத்தாய் மலர்ந்த
வியர்வை பூக்கள்
நம் இருவர் கைகள் பிணைந்து
ஒருமைக்குள் பதியனிட்ட
மகரந்த சேர்க்கையின்
மந்தகாச சுவாசங்கள்
எல்லாம் முரசுக்கொட்டிய
சேதி ஒன்றேதான்
நீ என் முதலும் முற்றுமான சிநேகிதன்.

4 comments:

 1. எல்லாம் முரசுக்கொட்டிய
  சேதி ஒன்றேதான்
  நீ என் முதலும் முற்றுமான சிநேகிதன்.//

  கொடுத்துவைத்தவர்
  தூய்மையான காதலை உணரச் செய்து போகும்
  அருமையான கவிதை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. காதலை அழகாக சொல்லும் இந்த கவிதை அருமை

  ReplyDelete