வாழ்க்கை தேடல்

Posted by G J Thamilselvi On Friday, 27 July 2012 3 comments


இரவின் ஜனனம்
மனதிற்குள் வந்து விடும்
இனம் புரியா பயங்களின்
தாக்கம்
தூரத்தில் குரைத்து
அடிவயிற்றில்
பயத்தை குழைத்துத் தரும்
நாய்களின் குரலோசை

நான்கு சுவருக்குள்
நான் மட்டும் தனிமையாய்
தனிமை சுகமான விடயம் தான்
நம்மிருவருக்குள் உதயமாகும் போது
டக டக டக வென்று
சுழலும் மின்சார விசிறியும்
ஆங்கிலம் பேசும்,
கலைஞரின் கைங்கரியத்தால்
கிடைத்த வண்ணத்தொலைக்காட்சியும்
பேச்சு துணைக்காக ஒரு மூலையில்
அதுவுமிருக்கட்டும் என்று
வைத்திருக்கிறேன்
தமி்ழ் பேசினால் புரியும்
அங்கே அழுதால் கொஞ்சம்
கண்கள் கரையும் என்தால்
ஆங்கிலம் பிடித்து போனது
இரைச்சல் இல்லாமல்
இனிதாய் இருக்க முடியவில்லை
கொசு கொஞ்சி இசை பேசுகிறது
என்னிடம்
தவணை முறையில் முத்தமிட்டு
காதலுடன் காயப்டுத்துகிறது
வலிதான்
காயப்படுத்தவாவது கொசு
இருக்கிறதே என்று
தேற்றம் பெருகிறது மனது
தனிமை சுகமான விடயம் தான்
நான் ஞானியாக இருந்திருந்தால்
இப்பொது மட்டுமென்ன குறைந்துவிட்டது
அந்த இரவின் திகில்
என்னுள் புது அனுபவ ஞானத்தை
உற்பவித்தது
புரண்டு புரண்டு புரண்டு
துடித்ததால்
தரை முனகுகிறது
அதற்கு வலிக்கிறது என்று
விரக தாபம் என்று எண்ணிவிடாதே
இரு உச்ச விரக்தியின் தாகம்
நீ மெய் ஞானியாயிற்றே
நீ எங்கே தனிமையில் இருக்கிறாய்
காற்றிருக்கிறது
காற்றில் கண்கள் அறியா
உயிர்கள் மிதக்கிறது
உன் மூச்சுக்காற்றில்
நீ பிழைத்திருக்க
கொல்கிறாய் எண்ணற்ற
உயிர்களை என்று
மெய் ஞானம் பேசுவாய்
மெய் ஞானி நீ
உனக்கெங்கே தெரியும்
பெண்மையின் ஏக்கமும்
ஆண்மையின் பாரமுகம்
படுத்தும் பாடும்
உன்னிடம் அரற்றுவதால்
எனக்குள் வந்தது
விரக தாபம் என்றெண்ணிவிடாதே
இருள் பாதையில் தனித்து
செல்லும் போது
சுடர் ஒளி தேடும்
உயிரின் தாக்கம் அது
தனியராய் இருப்பதிலும்
இருமைக்குள் இருத்திக்கொள்வதே
சுகம் –
நில் நில் முறுமுறுக்காதே
நீ நினைப்பது
தவறு
எனக்குள் விரக தாபமில்லை
பாதை தெரியாத
பாமரத்தி இவளின் வாழ்க்கை தேடல்

3 comments:

 1. "தனியராய் இருப்பதிலும்
  இருமைக்குள் இருத்திக்கொள்வதே
  சுகம்"
  உணர்வைப் பிரதிபலிக்கும் உயிரான வரிகள். மிகவும் அருமை

  ReplyDelete
 2. சுடர் ஒளி தேடும்
  உயிரின் தாக்கம் //

  நன்று.

  ReplyDelete