தாய்

Posted by G J Thamilselvi On Monday, 23 July 2012 1 commentsகவர்ந்த கண்கள் இன்று
கலை இழந்து பஞ்சடைந்து
பார்வை மங்கி மருகிபோனது
கண்களின் மேல் காப்பாய்
கைகள் காத்து நிற்கிறது.

சூரிய ஒளி கண்களை கூசச்செய்து
தன் வலிமையாய் வலிதருகிறது
இதழ்விரியும் மலர்முகம்
சுருக்க ரேகைகளின்
ஆக்கிரமிப்பில்
புது கோலம் பூண்டது
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை
வளைந்த முதுகின் வாகில்
வழுவிப்போகிறது
மழலைகள் சுவைத்து
முலை காம்பு
தொங்கி தோலானது
புன்னகை புரியும் பற்கள்
இறந்து பொக்கை வாயில்
மீண்டும் மழலை சிரிப்பு
தொற்றிக் கொண்டது
இதோ வயோதிகத்தின்
நிழலில் நான்
என் கைப்பற்றி நடந்த
மக்கள் கைகள் தாயரில்லை
என் கரம் பற்றி வழிநடத்த
ஊன்றுணையாய் ஒட்டி
வருகிறது உயிரில்லா
என் கைதடி.

1 comment:

  1. அருமை!
    "என் கைப்பற்றி
    நடந்த மக்கள் கைகள் தாராரில்லை"...?

    ReplyDelete