நீ அழைப்பாய் என

Posted by G J Thamilselvi On Sunday, 22 July 2012 1 comments


நெஞ்சுக்கூட்டில் இனம் புரியா படபடப்பு
இமைகளின் தழுவலில் இணைபிரியாமல்
ஒட்டிக்கொள்ளும் உன் உருவம்.
ஒருவரிடமும் பேச பிடிக்காமல்
உறங்குவதாய் பாசங்கு செய்யும் மனம்
இந்த நொடியே என் அலைபேசி
இசைமழை தூவும்
அதில் இதமாய் உன் குரல் மேவும்
என்றொரு ஆழ்ந்த எதிர்பார்ப்பு
அதுவும் தான் நடந்தது
அக்காவின் அங்கலாய்ப்பை
ஆர்வமே இல்லாமல் செவி மடுக்க
அந்த தருணங்களின் சித்தரிப்பில்
காத்திருப்பில் உன் அழைப்பு
பதறிய மனம் சிதறிபோன
கண்ணீர் முத்துக்களோடு
மீண்டும் அழைத்துப்பார்க்கிறேன்
நீண்ட மணியோசைக்கு பிறகு
பீங்ங்க் பீங்ங்க் பீங்ங்க்
என்ற ஒலியே பதிலாய்
உனக்கு பணியிருக்கும்மென்று
என் உயிரை தேற்றிக்கொள்கிறேன்
என் காதல் வலிகளை
நீ அறியாமல் கொல்கிறேன்.
தினம் தினமும்.

1 comment: