என்ன செய்தாய் என்னை...?

Posted by G J Thamilselvi On Friday, 20 July 2012 4 comments


என்ன செய்தாய் என்னை
உன் நிமிடங்கள் எனக்கானவை
அல்லவென்றபோதும்
உன்னையே சுற்றி வட்டமிடும்
மனம்.
நீ எடுக்கப்போவதில்லை
என்றபோதும்
உனக்காக மெனக்கெடும்
என் அலைபேசி அழைப்பு
நீ படிக்கப்போவதிலை
என்பதை உணர்ந்த பின்னும்
என் அலைபேசி வழி
உனக்கொரு குறுஞ்செய்தி
காதல் களத்தைக் கடந்த பின்னும்
காணாத உன் நலன்
தேடும் காதல் மனம்
இந்த நொடியே நீ அழைப்பாய்
என்றொரு எதிர்பார்ப்பில்
மாற்றப்படாத
அலைபேசி அழைப்பு மணி பாடல்.
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என்னாவேன்
ஓஓஓ நெருப்போடு வெந்தே
மண்ணாவேன்.

4 comments:

  1. அழகு........தொடருங்கள் சகோ

    ReplyDelete
  2. அருமையாக உள்ளது. சூப்பர்.

    ReplyDelete
  3. உன் நிமிடங்கள் எனக்கானவை.. .என்று மாற்றாலாம?

    ReplyDelete