நீ என்ன சொல்கிறாய்...?

Posted by G J Thamilselvi On Thursday, 19 July 2012 4 comments
மனம் முழுக்க உன்
நினைவுகளின் வாசம்
உறக்கத்தில் பிதற்றும்
மழலைப்போல
உதடுகள் உன் பெயரை
உச்சரிக்கிறது
இதழ் விரிந்து
இதமாய் புன்னகைக்கிறது
எதிரில் யார் வந்தாலும்
உன் முகம் காட்சியாகிறது.
கண்ணாடி பல முறை
பார்த்தும் ஏதோ
ஒரு முறையில்
அழகுதான் என்று
திருப்திபடுகிறது.
நீ பார்ப்பாய் என்பதற்காகவே
தேடி களைத்த பின்
உடுத்த தோன்றுகிறது
இப்பொழுதெல்லாம்
கவனமே இல்லாமல்
கனவுலக சஞ்சாரம் தான்
எனக்கு
பேசுபவர் எல்லாம்
செவிடு பட்டம் அளித்து
சலித்து போகிறார்கள்
கண்ட இடங்களில்
காதல் செய்கிறாய்
கனவை வாழ்வாய்
வாழச்செய்கிறாய்
உறங்கும் போது
விழிக்கச் செய்கிறாய்
உயிரை பிழிந்து
நோக செய்கிறாய்
எனை கண்டவர்கள்
காதல் பித்தென்று
வைகிறார்கள்
எனை கொண்டவனே
நீ என்ன சொல்கிறாய்.

4 comments:

  1. காதல் அவஸ்தையை அருமையாக கவிதையாக்கியிருக்கும் விதம் கண்டு ரசித்தேன்!

    ReplyDelete
  2. நல்லதொரு கவிதை கவிதையில் அதிக அனுபவம்மிக்கவரோ......

    ReplyDelete
  3. காதலினால் ஒரு மனிதனுக்குள் ஏற்படும் மாற்றங்களை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete