என்று மாறும் இலவசங்களை நாடும் மனபோக்கு

Posted by G J Thamilselvi On Monday, 2 July 2012 3 comments

27.06.2012 அன்று  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான மாற்றுதிறனாளிகள் முகாம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட மாற்றுதிறனாளிகளின் பெரும்பாலனோர் வேறு ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள். அந்த அந்த ஒன்றியங்களின் முகாம்களில் கலந்துக்கொண்டும் கூட அவர்கள் தேவைகள் புர்த்தி செய்யப்படாமல் செங்கம் ஒன்றியத்தில் நடைப்பெற்ற முகாமிலும் கலந்துக்கொண்டார்கள்.

இந்த முகாமிலும் அவர்களது தேவை புர்த்தி செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. இருந்தும் செய்தி புர்த்தி செய்யப்பட்ட தேவையை குறித்ததல்ல. வந்திருந்த மாற்றுதிறனாளிகளில் சிலர் குழந்தைகள், குழந்தைகளை நிர்வகிப்பது அவ்வளவொன்றும் சிரமத்திற்குரியது அல்ல. இளைஞர்களையும் முதியவர்களையும் நிர்வகிப்பது என்பது சற்று சிரமத்திற்குரியதே.

மாற்றுதிறனாளிகளுக்கு என்று முகாம் நடத்தும் அந்த இடத்தில் ஒரு மூன்று சக்கர நாற்காலி கூட இல்லை. குடிநீர் வசதி இல்லை. புதிய அடையாள அட்டை வாங்குவோர், பழைய அடையாள அட்டையை புதுப்பிப்போர், மாற்றுதிறனாளிகளுக்கான உதவி தொகை வேண்டுவோர், கண் சிகிச்சைக்காக வந்தவோர்… என இன்னும் பல காரணங்களுக்கா பிரித்து அமர்த்தி வைக்கப்பட்டவர்கள் மருத்துவர் இருந்த இடத்திற்கு செல்ல சிரமப்பட வேண்டியிருந்தது. 80 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளை தூக்கிக்கொண்டு இதற்கும் அதற்குமாய் அல்லாடிய உடன் வந்தோரின் சலிப்பு செவி தீண்டிய போது என் மனம் நொந்ததைப் போன்று சம்பந்தப்பட்டவர்களின் மனமும் நோகவே செய்தது.

ஏற்கனவே நோய் கொடுமையால் வாடும் அவர்களை அரசாங்கம் நானும் நலத்திட்டங்கள் வழங்குகிறேன் என்ற பெயரில் தன்னுடைய விளம்பரத்திற்காக கொடுமைப்படுத்துவது சரியான செயலா? அரசு வழங்கும் மூன்று சக்கர சைக்கிளும், மூன்று சக்கர நாற்காலியும், தரமானதாக இருக்கவில்லை.

பார்த்த உடனே மாற்றுதிறனாளி என்று குழந்தைக்கு கூட தெரியுமே, அவர்களுக்கு ஒரு அடையாள அட்டை தேவையா? மாற்று திறனாளிகளுக்கு உதவுவது என்று முடிவெடுத்த பிறகு மாற்றுதிறனாளிகள் ஏன் இதற்கும் அதற்குமாய் அல்லாடவேண்டும் அரசாங்கம் அவர்கள் இல்லத்திற்கே சென்று உதவலாமே.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் மாற்றுதிறனாளிகளின் பாதுகாவலர்கள் அவர்களை பாரமரிப்பதில் உள்ள சிக்கல்களை அனுபவித்து களைத்திருக்கும் நேரத்தில் நலதிட்டங்கள் வழங்குகிறேன் என்ற பெயரில் அரசாங்கம் இப்படி அலையவிட்டால் பாமரமக்களின் சலிப்பு மாற்றுதிறனாளிகளின் மீது செயற்படாதா?

மாற்றுதிறனாளிகளுக்கு வேண்டியது அடையாள அட்டையா? வாழ்வாதாரமா?

இந்த முறை சரியானதா? அடையாள அட்டையை வைத்துக்கொண்டு மாற்று திறனாளிகளால் என்ன சாதித்து விட முடியும்.

மாற்று திறனாளிகளுக்காக நடத்தப்படும் இத்தகைய முகாம்கள் மாற்று திறனாளிகளை சோர்வடையவே செய்கிறது. ஒருவருக்கு கிடைக்கும் உதவி பிரிதொருவருக்கு கிடைப்பதில்லை. மாற்று திறனாளிகளை ஊக்கப்படுத்துவதை போல் அமையாத இந்த முகாம்கள் அவர்களின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கைக்கும் கல்லறை எழுப்புவதாகவே அமைகிறது. கவிஞர்.கண்ணதாசனின் கவிதை ஒன்று,

அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

(நன்றி எழுத்து.காம்)


அனுபத்தை குறித்து, மாற்றுதிறனாளிகளின் வலிகளையும் வேதனையையும், ஒரு மாற்றுத்திறனாளியாய் பிறந்து பார்த்தால் தான் தெரியும் என்பதற்காக தானோ என்னவோ நானும் ஒரு மாற்று திறனாளியாய் பிறந்துவிட்டேன். வலிகளையும் வேதனையையும் அனுபவித்தேன் அனுபவிக்கிறேன் அதனால் பேசுகிறேன். என்று மாறும் இந்த சமுதாயம்... இலவசங்களை நோக்கி ஓடும் பாமரமக்களின் மனம் எப்பொழுது விழிப்படையும். தேவைப்படும் மனிதர்களுக்காக சேவை செய்யும் மனங்கள் எப்பொழுது அவர்களிடத்திற்கே சென்று உதவும்?

தேவைப்படுபவர்களுக்கு எது தேவையோ அதை நிவர்த்தி செய்யாமல் தேவையே அல்லாத மூன்று சக்கர வாகனமும் நாற்காலியும் என்னத்திற்காக...

மாற்று திறனாளிகளின் திறமைகள் முடக்கப்படுவது எதனால்? அவர்களின் நம்பிக்கைகள் தகர்க்கப்படுவது எதனால்... இத்தகைய செயல்களை மாற்றிக்கொள்ளுமா இந்த அரசாங்கம்.

அரசாங்கத்திற்குரிய போக்கு கவலைக்குரியதென்றால், முயற்சியற்று இலவசங்களை நாடும் நம் மனப்போக்கும் கேலிக்குரியதே நண்பர்களே…

3 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. இந்த பகுதியை படிக்கும் போது மனம் ஏனோ பாரமாக உணர்கிறது. ஏற்கனவே பல்வேறு நடைமுறை கஷ்டங்களை தினமும் எதிர்கொள்ளும் மாற்றுத்திரனாளி சகோதர, சகோதரிகளை இதுபோல அரசாங்கம் மேலும் கஷ்டபடுத்த வேண்டுமா என்ற கேள்வி பலமாக எழுகிறது. இதுபோன்ற மெத்தனமான நடவடிக்கைகளை இனியாவது அரசு இயந்திரம் மாற்றி கொள்ளவேண்டும். இதுபோல நடைமுறைகளை பின்பற்றாமல் மாற்றுதிரனாளிகளுக்கு உதவிட முன்வர வேண்டும். அந்த மாற்றம் விரைவில் நடக்க வேண்டுமென உங்களுடன் நானும் விரும்புக்கிறேன்.

  ReplyDelete
 3. :)..இதில் பதில் தர எனக்கு தகுதி உள்ளது..

  அரிதாய் கிடைக்கும், உணவு பங்கீட்டு அட்டைக்காக தரும், உணவுப்பொருள்களைத் தவிர்த்த அரசு தரும் பிற இலவசங்களை நான் பெருவதில்லை. புயல், மழை, வெள்ளம்,வறட்சி போன்ற நிவாரணங்கள், ரொக்கத்தொகை உட்பட..அவற்றை எதிர்கொள்ளும் சக்தியும் வசதியும் எனக்கிருக்கின்றது.. இல்லாதோருக்குக் கொடுங்கள் என்று!

  வாக்குகளைக் குறிவைத்து, தனிப்பட்ட அரசியல் கட்சிகள், அரசியல் கட்சி நண்பர்கள் தருவன எதையும் ஏற்பதில்லை..கட்டாயப்படுத்தினால் வாக்களிக்காது போவேன் என்று அச்சுருத்தியுமுள்ளேன்.

  இலவசங்கள் அற்றுப்போக மக்களிடம் சுயமரியாதை உணர்வு தோன்ற வேண்டும். சுய மரியாதையைப் பேணும்போது நீங்கள் நினைப்பது கைகூடும்!

  ReplyDelete