மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளுக்கு பின்வரும் பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்

 1. சிறந்த மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சுயதொழில் புரிவோர்.
 2. சிறந்த வேலை வழங்குவோர் மற்றும் பணியமர்த்தும் அதிகாரி / முகமை.
 3. மாற்றுத்திறனாளி நிமித்தமாக பணியாற்றும் சிறந்த தனிநபர் (தொழில்முறையும் சேர்த்து) மற்றும் சிறந்த நிறுவனம்.
 4. முன்னோடியாளர் விருதுகள்.
 5. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த பயன்பட்டு ஆராய்ச்சி புதுமைகள் தயாரிப்பு மேம்பாடு.
 6. மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறு இல்லாத சூழலை உருவாக்குவதில் தலைசிறந்த பணி.
 7. மீட்பு சீரமைப்பு சேவைகளை அளிப்பதில் சிறந்த மாவட்டம்.
 8. ஆடிசம், செராபரல் பால்சி, மூளை வளர்ச்சி குன்றியோர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுள்ள மாற்றுதிறனாளிகளின் நலத்திற்கான தேசிய அமைப்பின் சிறந்த உள்ளாட்சி மட்ட குழு.
 9. தேசிய மாற்றுத்திறனாளி நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த மாநில வழிவகை செய்யும் முகமை.
 10. தலைசிறந்த மாற்று திறனாளி படைப்பாளர் – பெரியவர்
 11. தலைசிறந்த மாற்றுதிறனாளி படைப்பாளர் – குழந்தை
 12. சிறந்த பிரெய்ல் அச்சகம் மற்றும்
 13. சிறந்த அணுகுநிலை இணையதளம்.

விண்ணப்பிக்கும் முறை

 1. வரையறுக்கப்பட்ட தகுதிகூறினை நிறைவு செய்யும் நபர்கள், நிறுவனங்கள் மற்றும் நிலையங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் இருக்க வேண்டும்.மேற்கூறிய ஒவ்வொரு பிரிவு விருதுகளுக்கான தகுதிகூறு, மற்றும் தேசிய விருதுகள், 2012 திட்டத்தின் முழு விவரங்களை அமைச்சகத்தின் இணையதளமான www.socialjustice.nic.in –ல் காணலாம்.
 2. மத்திய/மாநில அரசுகள்/யுனியன் பிரதேச நிர்வாகங்கள்/பொது துறையின் கீழியங்கும் நிறுவன ஊழியர்கள் தமது விண்ணப்பத்தை வரையறுக்கப்பட்ட மாதிரியில் (இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ மட்டும்) உரிய அமைச்சகம்/துறை/மாநிலஅரசு/யுனியன் பிரதேச நிர்வாகம்ஃபொதுதுறையில் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மூலம், இவ்வித அரசு/நிர்வாகம்/கீழ் இயங்கும் நிறுவனததின் சட்டப்பூர்வ அதிகாரி மூலமான முறையான அனுமதியுடன் அனுப்ப வேண்டும்.
 3. பிற நபராக இருந்தால் (சுயதொழில் புரிவோர் மேலும் தனியார் துறை நிறுவனங்கள்/அங்கீகரிப்படாத நிறுவனங்களை சார்ந்தவர்கள் உட்பட), விண்ணப்பங்கள் கீழ் வரும் ஒன்றால் பரிந்துரைக்கப்பட்டு மேலும் அதன் மூலமாக அனுப்பபட வேண்டும்.

மாற்றுதிறனாளிகள் விவகாரங்களை கையாளும் சம்பந்தப்பட்ட மாநில அரசு/யுனியன் பிரதேச நிர்வாகத்தின் துறை.

சம்பந்தப்பட்ட துறை மற்றும் பகுதியை கையாளும் மத்திய அமைச்சகம்/துறை.

மாற்றுத்திறனாளிகளை புனரமைப்பு செயல்பாட்டை கையாளும் ஒரு தேசிய நிறுவனம் (சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அல்லது சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ்).

சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சியர்.

மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதை கடந்த காலத்தில் பெற்றவர்.

 1. மேற்கூறிய பத்தி 2&3 ல் கூறப்பட்டவாறு முறையான வழிமுறையில் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
 2. வரையறுக்கப்பட்ட மாதிரி வடிவிலான விண்ணப்பங்கள் கீழ்வருவனவற்றால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டு பாஸ்மபோர்ட் அளவு புகைப்படங்கள் (தனிநபராக இருந்தால்).

சுய-விவரம், சாதனை விளக்கம் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் இணைத்து.

வரைவு மேற்கோள்கள் (ஒரு பக்கத்திற்கு மிகாமல்).

தகுதிகள்

மேற்கூறிய ஒவ்வொரு பிரிவு விருதுகளுக்கான தகுதிகூறு, மற்றும் தேசிய விருதுகள், 2012 திட்டத்தின் முழு விவரங்களை கீழ்காணும் அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம்.


சமர்ப்பிக்க டைசி நாள்

முறையாக பரிந்துரைக்கப்பட்ட, மேலும் அனைத்து விதத்திலும் புர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரிவு அதிகாரி (DD-IV) மாற்றுதிறனாளி நலத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், அறை எண் 242, A-விங், 2வது தளம், சாஸ்திரி பவன், புதுடெல்லி – 110 001, என்ற முகவரிக்கு, 31 ஆகஸ்ட், 2012 தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

கடைசி தேதிக்கு பின்பு வந்து சேரும் விண்ணப்பங்கள் மற்றும்/அல்லது குறிப்பிட்ட அதிகாரி / நபரால் பரிந்துரைக்கப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

நாமும் கொஞ்சம் யோசிப்போம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறு இல்லா சூழலை உருவாக்குவதில் தலைசிறந்த  பணிக்காக விருது வழங்கறாங்களாம்…விருதுக்காக இல்லீங்க வாழ வேண்டும் என்ற முனைப்போடு போராடி உருவெடுத்த சக அணு புள்ளிக்காக இடையூறு இல்லா சூழலை உருவாக்குவதில் பங்கெடுத்தால் நன்றாக தான் இருக்கும்.

மாற்று திறனாளிகள் ஏறுவதில் தாமதமாகும் என்ற காரணத்திற்காகவே பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை, சில சமயம் தண்டக்கருமாந்திரம் என்று திட்டுக்கு ஆளாக வேண்டிய நிலை… நான் ஒரு மாற்று திறனாளி என்பதால் இது என் அனுபவம் தான்.

மாடியிலோ அல்லது படிகளுடனோ அமைக்கப்பட்ட பொது அலுவலகங்கள்…. மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு சாய்தள வசதிகள் ஏதும் அமைத்து தருவதில்லை…மாற்று திறனாளிகள் அமர்வதற்கென்று குறைந்த பட்சமாக ஒரு நாற்காலி கூட அங்கு இருப்பதில்லை. (அங்க அவங்க நாற்காலிகளுக்கே பற்றாக்குறை திண்டாட்டம் அப்புறம் மாற்றுத்திறனாளிகளுக்கு எங்கே நாற்காலி கொடுக்கப்படும்)

பொது இடங்களில் மாற்று திறனாளிகளுக்கு என்று சிறப்பு கழிப்பிடம் இல்லாமை.

மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பேருந்தில் ஒதுக்கப்பட்டிருப்பினும் மாற்று திறனாளிகளுக்கு அந்த இருக்கைகளை ஒதுக்கி தர இயலாத நடைமுறை சாத்திய கூறுகள்.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மாற்று திறனாளிகளுக்குகென்று கழிப்பிட வசதி இல்லாமை.

தேர்வுமையங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு கீழே இருக்கைகள் அமைக்கபடும் என்று ஒரு புறம் விளம்பரம் செய்யப்பட்டிருக்க… தேர்வு எழுத சென்ற மாற்றுதிறனாளிகளுக்கு மாடிகளில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்க அவற்றை மாற்றிதர கோரி காத்திருக்கும் அவல நிலை…

இன்னமும் என் எண்ணங்களுக்கு ஆட்படாத எத்தனையோ அவர்களுக்கு ஒவ்வாத சூழலை உருவாக்கியிருக்க

மாற்று திறனாளிகளுக்கு இடையூறு இல்லாத சூழலை எப்படி உருவாக்குவது என்று தெரிந்தவர்கள் சொன்னால் நடைமுறைப்படத்த முயற்சி செய்யலாம்.

4 comments:

 1. சாட்டை அடியை இருக்கின்றன ஒவ்வொரு வார்த்தைகளும். இனியாவது இந்த பிரச்சனைகளை பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

  ReplyDelete
 2. அரசாங்கம் சிந்திப்பதற்காக அல்ல, அவர்கள் தேவைகளை நம்மால் முடிந்தவரை சந்திப்பதற்காக மட்டுமே எழுதினேன்
  .

  ReplyDelete
 3. காலம் கனியும்..ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் பல்வகையில் கிடைக்கும் அனுபங்களின்ன் பகிர்வுகள்தான்.. படிப்பினைதந்து.. பொலிவைத்தரும்!காலம் கனியும், கைகூடும் உங்களின் எதிர்பார்ப்பு!!

  ReplyDelete
 4. "படைப்பாளி" எனும் அடிப்படையில் நீங்களும் விண்ணப்பிக்கலாமே!

  ReplyDelete