TNPSC - GROUP 4 -GK - 1

Posted by G J Thamilselvi On Thursday, 28 June 2012 2 comments
பல்லவர்கள்
முதலாம் மகேந்திரவர்மன்:-

முதலாம் மகேந்திரவர்மன் பல்வேறு பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தார். சத்ருமல்லன், கலகபிரியன், ஆகிய இவரது போர்த் திறமையையும், குணபரன் என்ற பெயர் இவரது தாராள குணத்தையும் குறிக்கின்றன. சித்திரகார புலி, விசித்திர சித்தன், மத்தவிலாசன், சங்கீரண ஜதி ஆகிய பட்டப் பெயர்கள் கலை, இலக்கியம் ஆகியவற்றில் முதலாம் மகேந்திரவர்மனின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.

முதலாம் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக் கோயில்களை மண்டகப்பட்டு, மாமண்டூர், மகேந்திரவாடி,வல்லம், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், திருச்சி போன்ற இடங்களில் காணலாம்.

முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் ஓவியக் கலையும் சிறந்து விளங்கியது. இவரது காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் சித்தன்னவாசலில் காணப்படுகிறது.

முதலாம் மகேந்திரவர்மனின்  இசை ஆர்வத்தை குடுமியான் மலை இசைக் கல்வெட்டு மூலம் அறியலாம். பரிவாதினி என்ற பெயர் கொண்ட வீணை வாசிப்பில் மகேந்திரன் வல்லவராக விளங்கினார்.

முதலாம் மகேந்திரவர்மன் ஒரு சிறந்த வடமொழி அறிஞர்.

மத்தவிலாசப்பிரகசனம் என்ற நாடக நூலை வடமொழியில் இயற்றியவர் முதலாம்மகேந்திரவர்மன்.

மத்தவிலாசப்பிரகசனம் ஒரு நகைச்சுவை நாடக நூல்.

முதலாம் நரசிம்மவர்மன்

மணிமங்கலம் என்ற இடத்தில் இரண்டாம் புலிகேசியை முறியடித்தவர் முதலாம் நரசிம்மவர்மன்.

முதலாம் நரசிம்மவர்மனின் படைதளபதி பரஞ்சோதி.

முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்த போது உடன் இருந்தவர் தளபதி பரஞ்சோதி.

முதலாம் நரசிம்மவர்மனால் சாளுக்கிய தலைநகரான வாதாபி அழிக்கப்பட்டது.

சாளுக்கிய தலைநகரான வாதாபி முதலாம் நரசிம்மவர்மனால் அழிக்கப்பட்ட போது உடன் இருந்த படைதளபதி பரஞ்சோதி.

இரண்டாம் புலிகேசி வாதாபி போரில் முதலாம் நரசிம்மவர்மனால் கொல்லப்பட்டான்.

இரண்டாம் புலிகேசியை போரில் கொன்று வாதாபியை வெற்றிகொண்டதால் முதலாம் நரசிம்மவர்மன் வாதாபி கொண்டான் என புகழப்பட்டார்.

முதலாம் நரசிம்மவர்மன் இலங்கையின் மீது இரு முறை படையெடுத்து வெற்றிக்கொண்டார்.

முதலாம் நரசிம்மவர்மனின் நண்பர் மானவர்மன்

மானவர்மன் இழந்த அரியணையை மீட்டுதந்தவர் முதலாம்நரசிம்மவர்மன்.
முதலாம் நரசிம்ம வர்மனின் சிறப்பு பெயர்கள் மாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமோகன், ஸ்ரீநிதி, வாத்யவித்யாதரன்.

மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக்கல் இரதங்கள், குடைவரைகோயில் மண்டபங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியன முதலாம் நரசிம்ம வர்மன் காலத்தைச் சேர்ந்தது.

முதலாம் நரசிம்ம வர்மனை தொடர்ந்து இரண்டாம் மகேந்திரவர்மன், முதலாம் பரமேஸ்வரவர்மன் இரண்டாம் நரசிம்மன் ஆகியோர் ஆட்சிபுரிந்தனர்.

இரண்டாம் நரசிம்மன் இராஜசிம்மன் என்றும் அழைக்கப்பட்டார்.

விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன்.

பல்லவ மரபின் கடைசி அரசன் அபராஜிதன்

அபராஜித பல்லவனை கொன்ற சோழன் ஆதித்தன்

பல்லவர்களின் ஆட்சி முறை

பல்லவ பேரரசின் மிகப்பெரிய பிரிவு மண்டலம் அல்லது ராட்டிரம் எனப்படும்.

மண்டலத்தின் ஆளுநராக இளவரசர் ஒருவரை அரசரே நேரடியாக நியமித்தார்.

தொண்டை மண்டலத்தில் 24 கோட்டங்கள் இருந்தன.

கோட்டங்களை நாட்டார் அவை திறம்பட நிர்வகித்தது.

சபை என்றழைக்கப்பட்ட கிராம குழுவினால் ஊர் நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சர்கள் அமாத்தியர்கள் என்றழைக்கப்பட்டனர்.

அமாத்தியர்களுக்கு உத்தமசீலன், பிரம்மராஜன், பேரரையன் என்ற விருதுகள் கொடுக்கப்பட்டது.

பல்லவர் கால போர்களில் முக்கிய பங்கு வகித்த படைகள் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை.

பல்லவர்கள் கப்பற்படையையும் வைத்திருந்தனர்.

இரண்டாம் நரசிம்ம வர்மன் தனது கப்பற்படையை கொண்டு இலங்கையின் மீது இரு முறை போர்த்தொடுத்தான்.

பல்லவர்கால ஆட்சியில் நில வரியே அரசின் முக்கிய வரியாக இருந்தது.

பல்லவர் கால செப்பேடுகள் பதினெட்டு வகையான வரிகளை பற்றி குறிப்பிடுகிறது.

பல்லவர் கால வரிகள் காணம், இறை, பாட்டம் பூச்சி என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

பல்லவர்காலத்தில் குயவருக்கு விதிக்கப்பட்ட வரி குசக்காணம்.

பல்லவர் காலத்தில் நெசவுத்தொழிலாளருக்கு விதிக்கப்பட்ட வரி தறிஇறை.

பல்லவர் காலத்தில் கருவூலத்தை குமரன் பண்டாரம் என்ற அதிகாரி நிர்வகித்து வந்தார்.

பல்லவர் காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் சபை என்றொரு அமைப்பு நிர்வகித்து வந்தது.

சபையின் உறுப்பினர்கள் பெருமக்கள்.

பல்லவர்காலத்தில் ஒவ்வொரு சபையும் வாரியம் என்று தனிக்குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு வாரியமும் கோயில், நீர்பாசனம், ஏரிகள், தோட்டங்கள் போன்றவற்றை தனித்தனியே நிர்வாகம் செய்து வந்தன.

கிராம ஆட்சி சிறப்புற்றிருந்த காலம் – பல்லவர்காலம்.

பல்லவர்களின் ஆட்சி காலத்தில் சமூக பொருளாதார, சமய வாழ்க்கை

பக்தி இயக்கம் தோன்றி வளர்ந்தது – பல்லவர் ஆட்சி

பல்லவர் காலச் சமுதாயத்தின் நான்கு பிரிவு பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர்.

பல்லவர் சமுதாயத்தில் முதலிடம் பெற்றிருந்தவர்கள் பிராமணர்கள்.

பிராமணர்கள் வாழ்ந்த பகுதி அக்ரஹாரம்

பல்லவர் காலத்தில் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட  நில கொடைகள் பிரம்தேயங்கள்.

பல்லவர்கால சமுதாய அமைப்பின் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் சூத்திரர்கள்.

பல்லவர்கால கடைநிலை ஊழியர்கள் – சூத்திரர்கள்

பல்லவர்கால இலக்கியங்கள் சூத்திரர்களை புலையர், சண்டாளர் என்று குறிப்பிடுகின்றனர்.

பல்லவர்காலத்தில் மடங்கள் முக்கிய கல்வி கூடங்களாக திகழ்ந்தன.

பல்லவர் காலத்தில் மடங்களுக்கு நிலங்கள் மானியங்களாக வழங்கப்பட்டன.

பல்லவர்காலத்தில் கோயில்களும் கல்வி மையங்களாக செயல்பட்டன.

பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்த புத்த கடிகை ஒரு சிறந்த கல்வி மையம்.

காஞ்சிபுரத்திலிருந்த புத்த கடிகையில் கல்வி பயின்றவர்கள் யுவான்சுவாங், தர்மபாலர்

பல்லவர்காலத்தில் சமணப்பள்ளிகளும் காஞ்சியில் இருந்தன. இலக்கியம், இலக்கணம் ஜோதிடம், மருத்துவம், ஓவியம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

பல்லவர்காலத்தில் கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் தேவதானம்.

மாமண்டூரில் சித்திர தடாகம் என்ற ஏரியை அமைத்தவர் முதலாம் மகேந்திரவர்மன்.
பல்லவர் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி ஆடைகள் சீனா, எகிப்து, பாபிலோனியா, போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

பல்லவர்காலத்தில் பட்டுதுணிக்கு பெயர்பெற்று விளங்கியது காஞ்சிபுரம்.

பல்லவர்காலத்தில் வணிகர்கள் தனியாக சங்கங்கள் அமைத்துக்கொண்டனர்.

பல்லவர்கால வணிகர் சங்கம் மணிகிராமம் என்று அழைக்கப்பட்டது.

பல்லவர் காலத்தில் வணிகர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன.

பல்லவர்கள் அயல்நாட்டு வணிகர்களை நானாதேசிகள் என்று அழைத்தனர்.

பல்லவர் கால சிறந்த துறைமுக பட்டிணங்கள் மாமல்லபுரம், மயிலை.

பல்லவர் காலத்தில் நிலங்கள் உழவு, நிவர்த்தனம், பட்டிகா என்ற அளவுகாளால் அளக்கப்பட்டன.

பல்லவர் காலத்தில் ஹாலா என்ற சொல் நிலத்தின் ஒரு அளவை குறிக்கிறது.

பல்லவர் காலத்தில் கலப்பை ஒரு அளவுகோல்

பல்லவர்கள் அரிசி மற்றும் நெய்யை கடு நாழியில் அளந்தனர்.

பல்லவர் கால முகத்தல் அளவைகள் – விடேல், விடகு, உழக்கு.

பல்லவர் காலத்தில் நெய் பால் எண்ணெய் முதலானவற்றை அளக்க ஆழாக்கு, உழக்கு, உறி, நாழி, ஆகிய அளவுகள் பயன்படுத்தப்பட்டன.

பல்லவர்கள் தங்கத்தின் எடையை கழஞ்சு மஞ்சாடி என்று குறிப்பிட்டனர்.

பல்லவர் காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தி நெறியை பரப்பினார்கள். பக்தி இயக்கத்தில்  சாதி பாகுபாடு காணப்படவில்லை. தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களும், தங்களது பக்தியின் காரணமாக உயர்வாக மதிக்கப்பட்டனர்.

தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நந்தனார், திருப்பாணாழ்வார் போன்றவர்கள் நாயன்மாராகவும்  ஆழ்வாராகவும் போற்றப்பட்டனர்.

சிவனை வழிப்பட்டவர்கள் சைவர்கள்

பல்லவர் காலத்தில் சைவ சமயத்தைப் பரப்பியவர்கள் நாயன்மார்கள்.

நாயன்மார்கள் 63 பேர்.

நாயன்மார்களின் குறிப்பிடத்தக்கவர் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், இயற்றிய பாடல்கள் தேவாரம்.

தேவாரத்தை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.

இறைவனின் நண்பன் சுந்தரமூர்த்தி நாயனார்.

சுந்தரமூர்த்தி நாயனார் நம்பிரான் தோழன் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருவாசகத்தை பாடியவர் மாணிக்கவாசகர்.

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று கூறுவார்கள்.

காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் ஒருவர்.

பல்லவர் காலத்தில் சைவ சமயத்தில் பாசுபதர், காபாலிகர், காளமுகர் என்ற பிரிவுகள் இருந்தன.

ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்.

பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார் நால்வரும் தொண்டை மண்டலத்தை சார்ந்தவர்கள்.

நாதர் கோயில், மாமல்லபுர கடற்கரைக் கோயில் ஆகிய இரண்டும் கட்டுமான கோயில்களின் தொடக்க நிலை ஆகும். இவை இரண்டும் மணற்பாறைக் கற்களை கொண்டு கட்டப்பட்டது.

2 comments:

  1. நன்று.

    முடிந்தால் பல்லவர் குறித்த வரலாறு எழுதுங்களேன் நேத்ரா!

    ReplyDelete