நான் ரசிகை

Posted by G J Thamilselvi On Monday, 12 March 2012 3 comments

நான் ரசிகை
கொஞ்சும் அந்த அழகு நிலா பாவைக்கு
உள்ளத்தை தோற்ற நான் ரசிகை
சுட்டும் எனை சுட்டும் நித்தம்
எனை கண்டு கண்சிமிட்டும்
நட்சத்திர கூட்டத்திற்கு நான் ரசிகை
விரைவாய் விரைந்தோடும்
நீல கடல் தேடும்
மும்மாரி பொழிந்துவிட
விண்மலை தேடி மோதும்
விண்முகிலினங்களுக்கு நான் ரசிகை
அழகாய் சிரிக்கும்
அனபுமொழி விழி பேசும்
அன்னையுடன் உறவாடும்
தந்தையின்றி வாடும் மழலைப்பிள்ளைகட்டு
நான் ரசிகை
கண்ணோரம் கனவுகளை தேக்கி
நெஞ்சத்தின் ராஜாவை நோக்கி
கனவுலக காட்சிகளை
நிஜவுலகில் பிரதியிடும் கன்னியருக்கு
நான் ரசிகை
வண்டின கூட்டமாய்
வட்டமிடும் காளைகள்
வாலிப எழுச்சியில் செய்து போகும் தவறுகள்
கண்டும் காணமல் பொறுத்துபோகும்
பெற்றோர் என்றோ ஒரு நாள் கண்டிக்கும் காட்சிக்கு
நித்தம் கண்வைத்து காட்சிகள் தேடிடும்
நான் ரசிகை
வாலிபமும் வயோதிகமும் போட்டியிட்டு
வயோதிக உடலுக்குள் வாலிப ஊக்கத்தைகண்ட
நான் ரசிகை
ரசிக்க மட்டும் பிறந்ததால்
மாறிவிடும் பருவங்களை
மிக மிக அதிசயித்து
ரசித்து வைக்கும் நான்
ரசிகை மட்டுமே
சொச்சமாய் தொக்கி நிற்கும்
ஏக்கங்களை புரட்ட மனமில்லாமல்
அவ்வப்போது கல்லறைக்குள்
பதியனிடும் நான் ரசிகை
ரசிகை மட்டுமே.

3 comments:

 1. உங்கள் கவிதைகள் எல்லாமே மிகவும் அழகாக உள்ளது.

  ReplyDelete
 2. உங்கள் கவிதைகள் எல்லாம் நன்றாக உள்ளது .

  ReplyDelete
 3. 'அவ்வப்போது கல்லரைக்குள் பதியனிடும் ரசிகை'

  என்றவரிகளுக்கு பதில்


  "மண்ணில் பதியனிட்டால் மாற்றாரும்
  மகிழ்ந்து அறுவடைகாண்பாரென்று
  அவ்வப்போது மனவளப்பாத்தியில் பதியனிடும் ரசிகை!"

  என்றிருக்கலாமோ?

  ReplyDelete