வாழ்வியல் வெற்றிடம்

Posted by G J Thamilselvi On Tuesday, 6 March 2012 3 comments

நம் அறிமுகத்தில் பிறந்த ஈர்ப்பு
நம் உரையாடலில் இசைந்த களிப்பு
நாம் இருவராய் இல்லாமல்
ஓருயிராய் ஆன அழகான நொடி
வந்து போன குட்டி பிணக்குகளில்
கொஞ்சமாய் விழுந்த இடைவெளி...
தீர்க்க முனைந்தும் பார்க்க ஆசித்தும்
பேச தவியாய் தவித்தும் கூட
இணையான தோழியாய் ஒட்டிக்கொண்ட தயக்கம்
இன்றாவது அழைப்பாயா?,
தொலைபேசியை கையிலணைத்தபடி
நெஞ்சை நெருடும் எதிர்பார்ப்பு
நொடிகள் நீடிக்க, காலம் அதை நீட்டிக்க
வராத அழைப்பிற்காய் கலங்கிடும் கண்கள்
துடித்திடும் ஆன்மா........
எல்லாமே சுகம் தான் ஆனாலும்கூட
நட்பில் நீ இல்லாத தருணங்கள் மட்டும்
வாழ்வியல் வெற்றிடமாய்.


3 comments:

  1. சொல்லமுடியாமல் உணரமட்டுமே முடியும் தருணங்கள்!

    ReplyDelete
  2. unmaithaan natpu illaatha tharunam vaazhviyal vetridam thaan ....

    ReplyDelete
  3. ஆம் ...உள்ளே உணரினும் ...நட்பற்ற தருணம் வாழ்வியல் வெற்றிடமே ....

    ReplyDelete